• Sep 09 2025

தமிழரசுத்தாய் மறைவு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி; பிரம்மாண்டமாக கனடாவில் இடம்பெற்ற இறுதிக்கிரியைகள்!

shanuja / Sep 9th 2025, 3:51 pm
image

தமிழரசுத்தாய் எனக் அழைக்கப்படும்  புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட சோமசுந்தரம் சின்னத்தங்கம் என்பவர் தனது   98 ஆவது வயதில் கடந்த 3 ஆம் திகதி காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் கனடாவில்  பல்லாயிரக்கணக்கானோரின் அஞ்சலியுடன் இடம்பெற்றுள்ளது. 


பார்ப்பவர்கள் மெச்சும் அளவிற்கு சோமசுந்தரம் சின்னத்தங்கம் அவர்களின்  இறுதிக்கிரியைகள் கனடாவில் பிரம்மாண்டமாக இடம்பெற்றமை முக்கிய நிகழ்வாக அனைவராலும் பேசப்பட்டுள்ளது. . 


அவரது பிள்ளைகள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் இணைந்து  தங்களது தாயாரின் இறுதிக்கிரியைகளை நடத்தியுள்ளனர்.  இறுதிக்கிரியைகளில் கனடா வாழ் தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தமை சிறப்பாக அனைவராலும் வியந்து பார்க்கப்பட்டது 


குறிப்பாக பல்வேறு அமைப்பக்களை சேர்ந்தவர்கள் தமது இரங்கல்களை தெரிவித்திருந்தனர் அந்த வகையில், வட இலங்கை சர்வோதய குடும்பம் புங்குடுதீவு  மற்றும் தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம் ஜேர்மனி, கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம், நயினாதீவு கனடியர் அபிவிருத்திச் சங்கம், தலைவர் - கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம், சப்த சாகரம் குழுமம் கனடா, ஏகேரி மீற் அன்ட் சீ வூட், சோபிகா மைன்ட் மீடியா,  மாருதம்  மக்கள் மன்றம் - சுவிஸ் -கனடா, இலங்கையின் முன்னாள் வணிக உரிமையாளர்கள் சங்கம் - கனடா  உள்ளிட்ட பல அமைப்புக்கள் தமது இரங்கல்களை பதாகைகள் மூலமும் மலர் வளையங்களை வைத்தும் தெரிவித்துள்ளன. 


அஞ்சலி நிகழ்வுக்கு வருகை தந்த பல அரசியல் பிரமுகர்களும் பல உறவினர்களும் அவரைப் பற்றி அஞ்சலி உரைகளையும் நிகழ்த்தியிரிந்தனர். 


அதில் ஒரு சிலரின் உரைகளில், 

எங்களுடைய  புகழ்பூத்த குடும்பத்திலே பிறந்த ஒரு அருமைத்தாயார். புங்குடுதீவு அரசியலிலே தீவகத்திலே தமீழத்தினுடைய வல்லரசிலே ஒரு ஆதிக்கம் செலுத்த வல்ல சோமசுந்தரம் ஐயா அவர்களினுடைய துணைவியாரின் இறுதிக்கிரியைகளில் பங்குகொண்டுள்ளோம்.


1969 ஆம் ஆண்டு ஊர்காவற்றுறையைச் சேர்ந்த நவரத்தினம், தமிழரசுக்கட்சியின் தங்கமூலை என வர்ணிக்கப்பட்ட அவர் சுயாட்சைக் கழகத்தை உருவாக்கிய போது தீவகத்திலே தமிழரசுக்கட்சிக்கான மிகுந்த சவால் நிறைந்த காலகட்டத்தை சந்தித்தது. 


ஏற்கனவே நவரத்தினம்  நேர்மையானவராகவும் புத்திக்கூர்மை மிகுந்தவராகவும் காணப்பட்டதாலும் சுயாட்சிக் கழகம் வலுப்பெருக்கின்ற நேரத்திலே தமிழரசுக்கட்சி தீவகத்திலே இயங்க  முடியாமல் உள்ள சூழலில் காணப்பட்ட நேரத்தில் தான் சோமசுந்தரம் அரசியலிலே ஆதிக்கம் செலுத்தி வந்தார்.


அந்த வேளையில் அவர்கள் கடினமாக காலங்களை சந்தித்திருந்தார்கள். தீவகத்து தமிழரசுக் கட்சி என்பது அந்தக்  காலத்திலே மிகப்பெரிய ஆலமரத்தைப் போன்றது. அன்றைய காலகட்டத்தில் சோமசுந்தரம் ஐயா அவர்களினுடைய மகத்துவம் அளப்பெரியது. 


அவர் தனது சொந்தப் பணத்தைக் கட்சிக்காக செலவு செய்ததோடு தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் தமது வீட்டிலேயே உணவளிப்பார். அவரது இந்த தியாகத்திற்கு உறுதுணையாக இருந்ததால் தான் சின்னத்தங்கம் என்பவர் இந்தளவுக்கு போற்றப்படுகின்றார். 


அந்தக்  காலகட்டத்தில் மிகவும் வறுமைக்குட்பட்ட நிலையில் புங்குடுதீவிலுள்ள தொண்டர்கள், தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உணவு வழங்கியவர். 


இவ்வாறானதொரு பின்னணியில் சோமசுந்தரம் ஐயாவும் அவரது துணைவியார் சின்னத்தங்கமும் என்றென்றும் எமது புங்குடுதீவு மக்கள் மனங்களில் போற்றப்படுவர் என்பதில் ஐயமில்லை. - என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளனர். 


பார்ப்பவர்கள் மெய்ச்சும் அளவிற்கு சோமசுந்தரம் சின்னத்தங்கத்தின் இறுதிக்கிரியைகள் பிரம்மாண்டமாக பல மணிநேரங்கள் இடம்பெற்றதுடன் நேரடியாகவும் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. 


இறுதிக்கிரியைகளில் பங்குகொள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் வண்டுகள் மொய்த்தது போல சென்று கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.                                 


தமிழரசுத்தாய் மறைவு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி; பிரம்மாண்டமாக கனடாவில் இடம்பெற்ற இறுதிக்கிரியைகள் தமிழரசுத்தாய் எனக் அழைக்கப்படும்  புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட சோமசுந்தரம் சின்னத்தங்கம் என்பவர் தனது   98 ஆவது வயதில் கடந்த 3 ஆம் திகதி காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் கனடாவில்  பல்லாயிரக்கணக்கானோரின் அஞ்சலியுடன் இடம்பெற்றுள்ளது. பார்ப்பவர்கள் மெச்சும் அளவிற்கு சோமசுந்தரம் சின்னத்தங்கம் அவர்களின்  இறுதிக்கிரியைகள் கனடாவில் பிரம்மாண்டமாக இடம்பெற்றமை முக்கிய நிகழ்வாக அனைவராலும் பேசப்பட்டுள்ளது. . அவரது பிள்ளைகள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் இணைந்து  தங்களது தாயாரின் இறுதிக்கிரியைகளை நடத்தியுள்ளனர்.  இறுதிக்கிரியைகளில் கனடா வாழ் தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தமை சிறப்பாக அனைவராலும் வியந்து பார்க்கப்பட்டது குறிப்பாக பல்வேறு அமைப்பக்களை சேர்ந்தவர்கள் தமது இரங்கல்களை தெரிவித்திருந்தனர் அந்த வகையில், வட இலங்கை சர்வோதய குடும்பம் புங்குடுதீவு  மற்றும் தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம் ஜேர்மனி, கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம், நயினாதீவு கனடியர் அபிவிருத்திச் சங்கம், தலைவர் - கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம், சப்த சாகரம் குழுமம் கனடா, ஏகேரி மீற் அன்ட் சீ வூட், சோபிகா மைன்ட் மீடியா,  மாருதம்  மக்கள் மன்றம் - சுவிஸ் -கனடா, இலங்கையின் முன்னாள் வணிக உரிமையாளர்கள் சங்கம் - கனடா  உள்ளிட்ட பல அமைப்புக்கள் தமது இரங்கல்களை பதாகைகள் மூலமும் மலர் வளையங்களை வைத்தும் தெரிவித்துள்ளன. அஞ்சலி நிகழ்வுக்கு வருகை தந்த பல அரசியல் பிரமுகர்களும் பல உறவினர்களும் அவரைப் பற்றி அஞ்சலி உரைகளையும் நிகழ்த்தியிரிந்தனர். அதில் ஒரு சிலரின் உரைகளில், எங்களுடைய  புகழ்பூத்த குடும்பத்திலே பிறந்த ஒரு அருமைத்தாயார். புங்குடுதீவு அரசியலிலே தீவகத்திலே தமீழத்தினுடைய வல்லரசிலே ஒரு ஆதிக்கம் செலுத்த வல்ல சோமசுந்தரம் ஐயா அவர்களினுடைய துணைவியாரின் இறுதிக்கிரியைகளில் பங்குகொண்டுள்ளோம்.1969 ஆம் ஆண்டு ஊர்காவற்றுறையைச் சேர்ந்த நவரத்தினம், தமிழரசுக்கட்சியின் தங்கமூலை என வர்ணிக்கப்பட்ட அவர் சுயாட்சைக் கழகத்தை உருவாக்கிய போது தீவகத்திலே தமிழரசுக்கட்சிக்கான மிகுந்த சவால் நிறைந்த காலகட்டத்தை சந்தித்தது. ஏற்கனவே நவரத்தினம்  நேர்மையானவராகவும் புத்திக்கூர்மை மிகுந்தவராகவும் காணப்பட்டதாலும் சுயாட்சிக் கழகம் வலுப்பெருக்கின்ற நேரத்திலே தமிழரசுக்கட்சி தீவகத்திலே இயங்க  முடியாமல் உள்ள சூழலில் காணப்பட்ட நேரத்தில் தான் சோமசுந்தரம் அரசியலிலே ஆதிக்கம் செலுத்தி வந்தார்.அந்த வேளையில் அவர்கள் கடினமாக காலங்களை சந்தித்திருந்தார்கள். தீவகத்து தமிழரசுக் கட்சி என்பது அந்தக்  காலத்திலே மிகப்பெரிய ஆலமரத்தைப் போன்றது. அன்றைய காலகட்டத்தில் சோமசுந்தரம் ஐயா அவர்களினுடைய மகத்துவம் அளப்பெரியது. அவர் தனது சொந்தப் பணத்தைக் கட்சிக்காக செலவு செய்ததோடு தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் தமது வீட்டிலேயே உணவளிப்பார். அவரது இந்த தியாகத்திற்கு உறுதுணையாக இருந்ததால் தான் சின்னத்தங்கம் என்பவர் இந்தளவுக்கு போற்றப்படுகின்றார். அந்தக்  காலகட்டத்தில் மிகவும் வறுமைக்குட்பட்ட நிலையில் புங்குடுதீவிலுள்ள தொண்டர்கள், தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உணவு வழங்கியவர். இவ்வாறானதொரு பின்னணியில் சோமசுந்தரம் ஐயாவும் அவரது துணைவியார் சின்னத்தங்கமும் என்றென்றும் எமது புங்குடுதீவு மக்கள் மனங்களில் போற்றப்படுவர் என்பதில் ஐயமில்லை. - என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளனர். பார்ப்பவர்கள் மெய்ச்சும் அளவிற்கு சோமசுந்தரம் சின்னத்தங்கத்தின் இறுதிக்கிரியைகள் பிரம்மாண்டமாக பல மணிநேரங்கள் இடம்பெற்றதுடன் நேரடியாகவும் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இறுதிக்கிரியைகளில் பங்குகொள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் வண்டுகள் மொய்த்தது போல சென்று கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.                                 

Advertisement

Advertisement

Advertisement