திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் - செல்வநகர் பகுதியிலுள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான வெற்றுக் காணியிலிருந்து நிலக்கீழ் மிதிவெடி ஒன்று இன்று செவ்வாய்கிழமை (09) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
மாடு மேய்ப்பதற்காக சென்ற ஒருவர் வெளியில் தெரியும் வகையில் புதைக்கப்பட்ட நிலையில் மிதிவெடி இருப்பதைக் கண்டு சேருநுவர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதன் பின்னர் பொலிஸார், கிராம உத்தியோகத்தர்,மிதிவெடி அகற்றும் பிரிவினர் இன்று மிதிவெடி இருக்கும் இடத்தை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
அத்தோடு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அனுமதியைப் பெற்று இவ் மிதிவெடி விசேட அதிரடிப்படையினரால் அகற்றப்பட உள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை குறித்த மிதிவெடி அகற்றும் இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் யுத்த காலத்தில் இராணுவ முகாம் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
திருமலையில் காணியிலிருந்து நிலக்கீழ் மிதிவெடி கண்டுபிடிப்பு; நீதிமன்றின் அனுமதி பெற்று அகற்றுவதற்கு நடவடிக்கை திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் - செல்வநகர் பகுதியிலுள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான வெற்றுக் காணியிலிருந்து நிலக்கீழ் மிதிவெடி ஒன்று இன்று செவ்வாய்கிழமை (09) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.மாடு மேய்ப்பதற்காக சென்ற ஒருவர் வெளியில் தெரியும் வகையில் புதைக்கப்பட்ட நிலையில் மிதிவெடி இருப்பதைக் கண்டு சேருநுவர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.இதன் பின்னர் பொலிஸார், கிராம உத்தியோகத்தர்,மிதிவெடி அகற்றும் பிரிவினர் இன்று மிதிவெடி இருக்கும் இடத்தை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.அத்தோடு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அனுமதியைப் பெற்று இவ் மிதிவெடி விசேட அதிரடிப்படையினரால் அகற்றப்பட உள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.அதேவேளை குறித்த மிதிவெடி அகற்றும் இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் யுத்த காலத்தில் இராணுவ முகாம் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.