• Sep 10 2025

வர்த்தக நிலையங்களில் தொடர் திருட்டு; சிசிரிவியில் வசமாக சிக்கிய திருடர்கள்!

shanuja / Sep 9th 2025, 11:48 pm
image

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட பகுதிகளான ஏ9 வீதியில் உள்ள பல வர்த்தக நிலையங்கள், உதயநகர் மற்றும் விவேகானந்தநகர் ஆகிய இடங்களில் பல கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 


ஏ-9 வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நள்ளிரவு வேளையில் கடையின் முன் பகுதி கதவை உடைத்து சுமார் 15 லட்சம் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. 


குறித்த திருட்டுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள்  வர்த்தக நிலையத்தின் சி.சி.ரி.வி கமரா மூலம் சிக்கியுள்ளனர். 


இதே போன்று உதயநகர் பகுதியில் வீடு ஒன்றில் மூன்று திருடர்கள் முகமூடி அணிந்தவாறு வீட்டிற்கு செல்லும் சம்பவம், அங்கிருந்த சி.சி.ரி.வி  கமராவில் பதிவாகியதையடுத்து சிக்கியுள்ளனர். 


திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


முறைப்பாட்டுக்கமைய திருட்டுக்கள் தொடர்பான மேலதிக  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக நிலையங்களில் தொடர் திருட்டு; சிசிரிவியில் வசமாக சிக்கிய திருடர்கள் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட பகுதிகளான ஏ9 வீதியில் உள்ள பல வர்த்தக நிலையங்கள், உதயநகர் மற்றும் விவேகானந்தநகர் ஆகிய இடங்களில் பல கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஏ-9 வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நள்ளிரவு வேளையில் கடையின் முன் பகுதி கதவை உடைத்து சுமார் 15 லட்சம் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. குறித்த திருட்டுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள்  வர்த்தக நிலையத்தின் சி.சி.ரி.வி கமரா மூலம் சிக்கியுள்ளனர். இதே போன்று உதயநகர் பகுதியில் வீடு ஒன்றில் மூன்று திருடர்கள் முகமூடி அணிந்தவாறு வீட்டிற்கு செல்லும் சம்பவம், அங்கிருந்த சி.சி.ரி.வி  கமராவில் பதிவாகியதையடுத்து சிக்கியுள்ளனர். திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டுக்கமைய திருட்டுக்கள் தொடர்பான மேலதிக  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement