• Sep 10 2025

வெள்ளத்தில் மூழ்கிய கண்டியின் பகுதிகள்; அலைபாயும் வெள்ளத்தால் மக்கள் பெரும் சிரமம்!

shanuja / Sep 9th 2025, 7:01 pm
image

கண்டியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். 


கண்டியின் பல  பகுதிகளில் இன்று மதியம் முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.


கன மழை காரணமாக  சாமி மலை ஓயா,காட்மோர் ஓயா,மறே ஓயா, சியத்தகங்குல ஓயா வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


காட்மோர் நீர்வீழ்ச்சி,மறே நீர்வீழ்ச்சி ஆகிய இரண்டிலும் அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

மற்றும்  கண்டியின் பல பகுதிகளில்  உள்ள அனைத்து ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.


வீதிகள், கட்டடங்கள், வீடுகள், மலைப்பகுதிகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கியதால்  பாடசாலை மாணவர்கள் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 


வீதிகளில் வாகனங்களையும் மூடுமளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்கின்றதை அவதானிக்க முடிகின்றது. 


இதேவேளை- நீர் மின் நிலைய பகுதியில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலும்  நீர் வரத்து அதிகரித்துள்ளது.


அத்துடன் ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் பனிமூட்டம் காணப் படுவதால் வாகன சாரதிகள் வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துமாறு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளத்தில் மூழ்கிய கண்டியின் பகுதிகள்; அலைபாயும் வெள்ளத்தால் மக்கள் பெரும் சிரமம் கண்டியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். கண்டியின் பல  பகுதிகளில் இன்று மதியம் முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.கன மழை காரணமாக  சாமி மலை ஓயா,காட்மோர் ஓயா,மறே ஓயா, சியத்தகங்குல ஓயா வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.காட்மோர் நீர்வீழ்ச்சி,மறே நீர்வீழ்ச்சி ஆகிய இரண்டிலும் அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.மற்றும்  கண்டியின் பல பகுதிகளில்  உள்ள அனைத்து ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.வீதிகள், கட்டடங்கள், வீடுகள், மலைப்பகுதிகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கியதால்  பாடசாலை மாணவர்கள் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீதிகளில் வாகனங்களையும் மூடுமளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்கின்றதை அவதானிக்க முடிகின்றது. இதேவேளை- நீர் மின் நிலைய பகுதியில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலும்  நீர் வரத்து அதிகரித்துள்ளது.அத்துடன் ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் பனிமூட்டம் காணப் படுவதால் வாகன சாரதிகள் வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துமாறு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement