• Sep 10 2025

சுவிட்சர்லாந்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து யாழ் இளைஞர் பலி; நண்பரின் வீட்டில் நடந்த விபரீதம்!

shanuja / Sep 9th 2025, 9:40 pm
image

சுவிட்சர்லாந்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து யாழ்.இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

சுவிட்சர்லாந்து   சூரிச்  மாநிலத்தில்  சில தினங்களுக்கு முன்னர் இந்தத் துயரச்  சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியைப்  பூர்வீகமாகக் கொண்ட  குகராசசர்மா அரிஷ்சர்மா (வயது- 22) என்ற இளைஞரே  இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .


நண்பரின் வீட்டில் இருந்தபோதே மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தவறுதலாக இளைஞர் உயிரிழந்துள்ளமை இளைஞரின் குடும்பத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


சம்பவம் தொடர்பாக சூரிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இளைஞரின் இறுதிக்கிரியைகள் நாளை சூரிச் மாநிலத்தில் இடம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து யாழ் இளைஞர் பலி; நண்பரின் வீட்டில் நடந்த விபரீதம் சுவிட்சர்லாந்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து யாழ்.இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சுவிட்சர்லாந்து   சூரிச்  மாநிலத்தில்  சில தினங்களுக்கு முன்னர் இந்தத் துயரச்  சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியைப்  பூர்வீகமாகக் கொண்ட  குகராசசர்மா அரிஷ்சர்மா (வயது- 22) என்ற இளைஞரே  இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .நண்பரின் வீட்டில் இருந்தபோதே மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறுதலாக இளைஞர் உயிரிழந்துள்ளமை இளைஞரின் குடும்பத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக சூரிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இளைஞரின் இறுதிக்கிரியைகள் நாளை சூரிச் மாநிலத்தில் இடம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement