• Feb 08 2025

சூதாட்ட நிலையம் திடீர் சுற்றிவளைப்பு - சிக்கிய 13 வர்த்தகர்கள்!

Chithra / Dec 31st 2024, 3:08 pm
image


கண்டி  - தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள திகன என்ற இடத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் கட்டடம் ஒன்றை அமைத்து வர்த்தகர்கள் பலர் இணைந்து நடத்தி வந்த சூதாட்ட நிலையம் ஒன்றை மெனிக்கின்ன பொலிஸார் இன்று முற்றுகையிட்டு 13 வர்த்தகர்களை கைது செய்துள்ளனர்.

மேற்படி சூதாட்ட நிலையம் சுற்றி வர மதிற்சுவர் கட்டப்பட்டு, பிரதான வாயிலில் இரும்பு கடவை போடப்பட்டு யாரும் உற்பிரவேசிக்க முடியாத நிலையில் அமைக்கப்பட்டு இரகசியமான முறையில் சூதாட்டம் இடம்பெற்று வந்துள்ளது. 

மேற்படி கைதின் போது சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட 31 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தெல்தெனிய பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் அமரசிங்கவிற்கு கிடைத்த முறைப்பாட்டின்படி, மெனிக்கின்ன பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.எம். சந்திரபால தலைமையிலான குழுவினரே மேற்படி முற்றுகையை மேற்கொண்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சூதாட்ட நிலையம் திடீர் சுற்றிவளைப்பு - சிக்கிய 13 வர்த்தகர்கள் கண்டி  - தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள திகன என்ற இடத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் கட்டடம் ஒன்றை அமைத்து வர்த்தகர்கள் பலர் இணைந்து நடத்தி வந்த சூதாட்ட நிலையம் ஒன்றை மெனிக்கின்ன பொலிஸார் இன்று முற்றுகையிட்டு 13 வர்த்தகர்களை கைது செய்துள்ளனர்.மேற்படி சூதாட்ட நிலையம் சுற்றி வர மதிற்சுவர் கட்டப்பட்டு, பிரதான வாயிலில் இரும்பு கடவை போடப்பட்டு யாரும் உற்பிரவேசிக்க முடியாத நிலையில் அமைக்கப்பட்டு இரகசியமான முறையில் சூதாட்டம் இடம்பெற்று வந்துள்ளது. மேற்படி கைதின் போது சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட 31 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.தெல்தெனிய பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் அமரசிங்கவிற்கு கிடைத்த முறைப்பாட்டின்படி, மெனிக்கின்ன பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.எம். சந்திரபால தலைமையிலான குழுவினரே மேற்படி முற்றுகையை மேற்கொண்டனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement