• Apr 03 2025

டிசம்பர் மாதத்தின் முதல் 29 நாட்களில் நாட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Chithra / Dec 31st 2024, 3:12 pm
image

 

டிசம்பர் மாதத்தின் முதல் 29 நாட்களில் 233,087 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 50,705 ஆகும்.

இந்நிலையில், ரஷ்யாவிலிருந்து 31,949 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 17,539 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 13,568 சுற்றுலாப் பயணிகளும், 

அவுஸ்திரேலியாவிலிருந்து 12,440 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 9,532 சுற்றுலாப் பயணிகளும், அமெரிக்காவிலிருந்து 7,751 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2,037,960 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தின் முதல் 29 நாட்களில் நாட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்  டிசம்பர் மாதத்தின் முதல் 29 நாட்களில் 233,087 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 50,705 ஆகும்.இந்நிலையில், ரஷ்யாவிலிருந்து 31,949 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 17,539 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 13,568 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 12,440 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 9,532 சுற்றுலாப் பயணிகளும், அமெரிக்காவிலிருந்து 7,751 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2,037,960 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement