சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் இடம்பெறவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக புத்தாண்டுக்குரிய அரசியல் செயற்பாடுகள், உள்ளூராட்சி சபைத் தேர்தல், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், முக்கிய சில முடிவுகளை எடுப்பதற்காகவுமே இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
இதில் கட்டாயம் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிரணி பிரதம கொறடா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பு முடிந்த பின்னர் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுடன் சஜித் பிரேமதாச பேச்சு நடத்தவுள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சஜித் தலைமையில் இடம்பெறவுள்ள முக்கிய கூட்டம். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் இடம்பெறவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.குறிப்பாக புத்தாண்டுக்குரிய அரசியல் செயற்பாடுகள், உள்ளூராட்சி சபைத் தேர்தல், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், முக்கிய சில முடிவுகளை எடுப்பதற்காகவுமே இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.இதில் கட்டாயம் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிரணி பிரதம கொறடா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இச்சந்திப்பு முடிந்த பின்னர் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுடன் சஜித் பிரேமதாச பேச்சு நடத்தவுள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.