ஹசலக்க - தொரபிட்டிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
ஹசலக்க பிரதேச பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியே உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு மாணவி தனது தாயாரிடம் கைப்பேசியை பெற்றுக்கொண்டு தனது படுக்கையறைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அலறல் சத்தம் கேட்டு தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் அறைக்குள் ஓடிச்சென்று பார்த்துள்ளனர்.
அப்போது மாணவி இரும்புக் கைப்பிடி கொண்ட கட்டிலின் ஒரு பகுதியை பிடித்துக்கொண்டு அலறியுள்ளார்.
உடனே தந்தை எதிரே இருந்த மின்விளக்கை அணைத்துவிட்டு மாணவியை ஹசலக்க வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே மாணவி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஹசலக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி 14 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு ஹசலக்க - தொரபிட்டிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.ஹசலக்க பிரதேச பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியே உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு மாணவி தனது தாயாரிடம் கைப்பேசியை பெற்றுக்கொண்டு தனது படுக்கையறைக்குச் சென்றுள்ளார். அப்போது அலறல் சத்தம் கேட்டு தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் அறைக்குள் ஓடிச்சென்று பார்த்துள்ளனர். அப்போது மாணவி இரும்புக் கைப்பிடி கொண்ட கட்டிலின் ஒரு பகுதியை பிடித்துக்கொண்டு அலறியுள்ளார். உடனே தந்தை எதிரே இருந்த மின்விளக்கை அணைத்துவிட்டு மாணவியை ஹசலக்க வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே மாணவி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் ஹசலக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.