பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கம்பளை – கெலிஓயா நகரில் எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது, எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும், வரிச் சுமையைக் குறைக்க வேண்டும், பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும், அஸ்வெசும நலன்புரித் திட்டம் எங்கே? வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் எங்கே? போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டி, அரசாங்கத்திற்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கொள்கைத் திட்டத்தைக் குறிக்கும் ஆவணமொன்றைக் கிழித்து தீயிட்டுக் கொளுத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதியின் கொள்கைத் திட்ட ஆவணம் தீயிட்டு எரிப்பு - ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கம்பளை – கெலிஓயா நகரில் எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளன.ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.இதன்போது, எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும், வரிச் சுமையைக் குறைக்க வேண்டும், பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும், அஸ்வெசும நலன்புரித் திட்டம் எங்கே வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் எங்கே போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டி, அரசாங்கத்திற்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கொள்கைத் திட்டத்தைக் குறிக்கும் ஆவணமொன்றைக் கிழித்து தீயிட்டுக் கொளுத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.