கம்பளை – புசல்லாவ பிரதான வீதியின் மாரா பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பளை நகரிலிருந்து நான்கு பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியும், புசல்லாவ பகுதியிலிருந்து கம்பளை நோக்கிப் பயணித்த வேனும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் காயமடைந்து கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 15 வயதுடைய மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய வேன் சாரதியை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
முச்சக்கரவண்டி – வேன் நேருக்கு நேர் மோதல்-இரவில் அரங்கேறிய சோகம் கம்பளை – புசல்லாவ பிரதான வீதியின் மாரா பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கம்பளை நகரிலிருந்து நான்கு பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியும், புசல்லாவ பகுதியிலிருந்து கம்பளை நோக்கிப் பயணித்த வேனும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் காயமடைந்து கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15 வயதுடைய மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.விபத்துடன் தொடர்புடைய வேன் சாரதியை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.