• Nov 07 2025

கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட 149 புறாக்கள்! இருவர் கைது

Chithra / Oct 10th 2025, 2:41 pm
image


இந்தியாவிலிருந்து கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட 149 புறாக்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து கற்பிட்டிக்கு பயணித்த கப்பல் ஒன்றில் குறித்த புறாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், கப்பலில் இருந்த சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட புறாக்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

விசாரணைகளின் போது, இந்த புறாக்கள் விற்பனைக்காக நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

புறா ஒன்றின் விலை 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். 

கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட 149 புறாக்கள் இருவர் கைது இந்தியாவிலிருந்து கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட 149 புறாக்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைப்பற்றியுள்ளனர்.இந்தியாவில் இருந்து கற்பிட்டிக்கு பயணித்த கப்பல் ஒன்றில் குறித்த புறாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், கப்பலில் இருந்த சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.கைப்பற்றப்பட்ட புறாக்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.விசாரணைகளின் போது, இந்த புறாக்கள் விற்பனைக்காக நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.புறா ஒன்றின் விலை 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement