மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து எலிக்காய்ச்சல் பரவல் தீவிரமடைந்துள்ளதாக மாவட்ட தொற்றா நோய் தடுப்பு நிபுணரும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆண்டு (2026) ஆரம்பித்து சில நாட்களிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 18 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இருதொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர் உதயகுமார் தெரிவிக்கையில்
வெள்ள நீரில் நடமாடியவர்கள் மற்றும் வயல் நிலங்களில் பணிபுரிந்தவர்களே இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் பரவலைக் கட்டுப்படுத்தச் சுகாதாரத் திணைக்களம் ஊடாகப் பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
நோய்த் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் உள்ள பகுதிகளில் தடுப்பு மருந்துகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளில் தேவையற்ற முறையில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும், விவசாயப் பணிகளில் ஈடுபடுவோர் உரியப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
காய்ச்சல், தசை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
மட்டக்களப்புப் பகுதியில் தற்சமயம் களுவாஞ்சிகுடி சுகாதாரப் பரிசோதனைகளும் நடைபெற்று வருவதால், உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்து மக்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அநுராதபுரம் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் எலிக்காய்ச்சல் நோயினால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலக தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்தியர் தேஜன சோமதிலக்க தெரிவித்தார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 360 பேர் எலிக்காய்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை தொற்றுநோய் பிரிவு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கெப்பித்திகொள்ளாவ பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவில் 30 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வருடத்தின் பெரும் போக நெற் பயிர்ச்செய்கை காலத்திலேயே அதிகளவானவர்கள் எலிக்காய்சல் நோயினால் பாதிக்கப்படுவதாகவும் சுகாதார தரப்பினர் கூறும் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் எலிக்காய்சல் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்தியர் தேஜன சோமதிலக்க மேலும் தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் 16 பேர் பலி மட்டக்களப்பில் பலர் பாதிப்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து எலிக்காய்ச்சல் பரவல் தீவிரமடைந்துள்ளதாக மாவட்ட தொற்றா நோய் தடுப்பு நிபுணரும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்த ஆண்டு (2026) ஆரம்பித்து சில நாட்களிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 18 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இருதொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர் உதயகுமார் தெரிவிக்கையில் வெள்ள நீரில் நடமாடியவர்கள் மற்றும் வயல் நிலங்களில் பணிபுரிந்தவர்களே இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நோய் பரவலைக் கட்டுப்படுத்தச் சுகாதாரத் திணைக்களம் ஊடாகப் பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.நோய்த் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் உள்ள பகுதிகளில் தடுப்பு மருந்துகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளில் தேவையற்ற முறையில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும், விவசாயப் பணிகளில் ஈடுபடுவோர் உரியப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். காய்ச்சல், தசை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.மட்டக்களப்புப் பகுதியில் தற்சமயம் களுவாஞ்சிகுடி சுகாதாரப் பரிசோதனைகளும் நடைபெற்று வருவதால், உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்து மக்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை அநுராதபுரம் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் எலிக்காய்ச்சல் நோயினால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலக தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்தியர் தேஜன சோமதிலக்க தெரிவித்தார்.அநுராதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 360 பேர் எலிக்காய்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை தொற்றுநோய் பிரிவு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.கெப்பித்திகொள்ளாவ பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவில் 30 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.வருடத்தின் பெரும் போக நெற் பயிர்ச்செய்கை காலத்திலேயே அதிகளவானவர்கள் எலிக்காய்சல் நோயினால் பாதிக்கப்படுவதாகவும் சுகாதார தரப்பினர் கூறும் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் எலிக்காய்சல் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்தியர் தேஜன சோமதிலக்க மேலும் தெரிவித்தார்.