• Sep 20 2024

இரகசியமாக வெளிநாடு செல்லும் முயற்சி - வாகனத்திற்குள் மூச்சடைத்து 18 பேர் மரணம்! SamugamMedia

Tamil nila / Feb 18th 2023, 9:11 am
image

Advertisement

பல்கேரியாவில் கைவிடப்பட்ட கனரக வாகனம் ஒன்றில் இருந்து 18 பேர்களின் சடலங்கள் மீட்பட்ட நிலையில், அதில் பயணித்த அனைவரும் ஆப்கானிஸ்தான் புலம்பெயர் மக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


பல்கேரிய உள்விவகார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, குறித்த கனரக வாகனமானது சோபியா அருகே கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதன் சாரதி அப்பகுதியில் இருந்து தப்பியுள்ளார்.


ஆனால், காவல்துறையினர் முன்னெடுத்த சோதனையில், குறித்த வாகனத்தில் ரகசிய பகுதியில் 40 பேர்கள் கொண்ட புலம்பெயர் மக்களின் குழு ஒன்று ஒளிந்திருந்துள்ளது.



உண்மையில் அந்த வாகனமானது மரக்கட்டைகளை ஏற்றிச் செல்வதாகவே பயன்படுத்தியுள்ளனர். இதில் 18 பேர்கள் சடலங்களாக மீட்கப்பட, எஞ்சியவர்களை மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.


இதில் 8 பேர்களின் நிலை ஆபத்து கட்டத்தில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


40 பேர்களின் அடையாளங்கள் இதுவரை அதிகாரிகளால் உறுதி செய்யப்படாத நிலையில், அவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் என பல்கேரிய உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இரகசியமாக வெளிநாடு செல்லும் முயற்சி - வாகனத்திற்குள் மூச்சடைத்து 18 பேர் மரணம் SamugamMedia பல்கேரியாவில் கைவிடப்பட்ட கனரக வாகனம் ஒன்றில் இருந்து 18 பேர்களின் சடலங்கள் மீட்பட்ட நிலையில், அதில் பயணித்த அனைவரும் ஆப்கானிஸ்தான் புலம்பெயர் மக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.பல்கேரிய உள்விவகார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, குறித்த கனரக வாகனமானது சோபியா அருகே கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதன் சாரதி அப்பகுதியில் இருந்து தப்பியுள்ளார்.ஆனால், காவல்துறையினர் முன்னெடுத்த சோதனையில், குறித்த வாகனத்தில் ரகசிய பகுதியில் 40 பேர்கள் கொண்ட புலம்பெயர் மக்களின் குழு ஒன்று ஒளிந்திருந்துள்ளது.உண்மையில் அந்த வாகனமானது மரக்கட்டைகளை ஏற்றிச் செல்வதாகவே பயன்படுத்தியுள்ளனர். இதில் 18 பேர்கள் சடலங்களாக மீட்கப்பட, எஞ்சியவர்களை மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.இதில் 8 பேர்களின் நிலை ஆபத்து கட்டத்தில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.40 பேர்களின் அடையாளங்கள் இதுவரை அதிகாரிகளால் உறுதி செய்யப்படாத நிலையில், அவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் என பல்கேரிய உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement