• Nov 22 2024

கடந்த 24 மணி நேரத்தில் தாய்வானை வட்டமிட்ட 19 சீனப் போர் விமானங்கள்..!!

Tamil nila / Mar 1st 2024, 10:08 pm
image

கடந்த 24 மணி நேரத்தில் 19 சீன இராணுவப் போர் விமானங்கள் மற்றும் 7 கடற்படைக் கப்பல்கள் தமது நாட்டுக்கு அருகில் ரோந்து சென்றதாக தாய்வானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதாவது சீனாவின் நடவடிக்கைக்கு பின்னர்,தாய்வான் இராணுவம், விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் சீனாவின் போர் விமானங்கள் 253 முறையும் கடற்படை கப்பல்கள் 150 முறையும் தாய்வானின் வான்பரப்பு மற்றும் கடற்பரப்பில் ரோந்து சென்றதாக தாய்வான் கூறியுள்ளது.

மேலும் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், தாய்வான் அருகில் சீனா தொடர்ந்து தனது இராணுவ ஊடுருவல்களை மேற்கொண்டு வருகிறது.

தாய்வானில் ஊடுருவுவதை மறைக்க சீனா இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்கக்கூடும் என அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கடற்படை தளபதி அட்மிரல் சாமுவேல் பாப்பரோ தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவுக்கு அருகில் உள்ள தீவு நாடான தாய்வான்,தன்னை ஒரு சுதந்திர நாடு என கூறி வருகிறது. எனினும் தாய்வான் தனக்கு சொந்தமானது என சீனா தெரிவித்து வருகின்றது.

தாய்வான் 1996 ஆம் ஆண்டு முதல் தேர்தலை நடத்தி அதன் ஜனநாயக ரீதியான அரசாங்கங்களை தேர்ந்தெடுத்துள்ளது.

தாய்வானின் மிகப்பெரிய ஆதரவாளராகவும் நட்பு நாடாகவும் அமெரிக்கா இருந்து வருகிறது.

குறிப்பாக இந்த இருநாடுகளும் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், தாய்வானுக்கு தேவையான ஆயுதங்கள் அமெரிக்காவால் வழங்கப்படுகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் தாய்வானை வட்டமிட்ட 19 சீனப் போர் விமானங்கள். கடந்த 24 மணி நேரத்தில் 19 சீன இராணுவப் போர் விமானங்கள் மற்றும் 7 கடற்படைக் கப்பல்கள் தமது நாட்டுக்கு அருகில் ரோந்து சென்றதாக தாய்வானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதாவது சீனாவின் நடவடிக்கைக்கு பின்னர்,தாய்வான் இராணுவம், விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தியுள்ளது.கடந்த பெப்ரவரி மாதம் சீனாவின் போர் விமானங்கள் 253 முறையும் கடற்படை கப்பல்கள் 150 முறையும் தாய்வானின் வான்பரப்பு மற்றும் கடற்பரப்பில் ரோந்து சென்றதாக தாய்வான் கூறியுள்ளது.மேலும் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், தாய்வான் அருகில் சீனா தொடர்ந்து தனது இராணுவ ஊடுருவல்களை மேற்கொண்டு வருகிறது.தாய்வானில் ஊடுருவுவதை மறைக்க சீனா இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்கக்கூடும் என அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கடற்படை தளபதி அட்மிரல் சாமுவேல் பாப்பரோ தெரிவித்துள்ளார்.மேலும் சீனாவுக்கு அருகில் உள்ள தீவு நாடான தாய்வான்,தன்னை ஒரு சுதந்திர நாடு என கூறி வருகிறது. எனினும் தாய்வான் தனக்கு சொந்தமானது என சீனா தெரிவித்து வருகின்றது.தாய்வான் 1996 ஆம் ஆண்டு முதல் தேர்தலை நடத்தி அதன் ஜனநாயக ரீதியான அரசாங்கங்களை தேர்ந்தெடுத்துள்ளது.தாய்வானின் மிகப்பெரிய ஆதரவாளராகவும் நட்பு நாடாகவும் அமெரிக்கா இருந்து வருகிறது.குறிப்பாக இந்த இருநாடுகளும் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், தாய்வானுக்கு தேவையான ஆயுதங்கள் அமெரிக்காவால் வழங்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement