• Feb 07 2026

காத்தான்குடியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களுடன் 2 வர்த்தகர்கள் கைது !

dileesiya / Jan 6th 2026, 4:51 pm
image

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களுடன் இரண்டு போதை பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிசாரினால் நேற்றிரவு(5) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் ஹிரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து போதை பொருட்களை கடத்தி வந்து கல்லடியில் உள்ள விடுதியொன்றில் வைத்து விற்பனை செய்து வரும் குறித்த நபர்கள் பிரபல போதை வியாபாரிகள் என தெரிவிக்கப்படுகிறது.

கல்லடியிலிருந்து சம்மாந்துறைக்கு குறித்த போதைப் பொருட்களை எடுத்துச் சென்ற நிலையில் பொலிசாரினால் இவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

போதைப் பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் 26 மற்றும் 29 வயதுடைய நபர்கள் என தெரிவித்த பொலிசார் வாழைச்சேனையை சேர்ந்தவர்கள் எனவும்  மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில்  மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

காத்தான்குடியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களுடன் 2 வர்த்தகர்கள் கைது ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களுடன் இரண்டு போதை பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிசாரினால் நேற்றிரவு(5) கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடமிருந்து சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் ஹிரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.கொழும்பிலிருந்து போதை பொருட்களை கடத்தி வந்து கல்லடியில் உள்ள விடுதியொன்றில் வைத்து விற்பனை செய்து வரும் குறித்த நபர்கள் பிரபல போதை வியாபாரிகள் என தெரிவிக்கப்படுகிறது.கல்லடியிலிருந்து சம்மாந்துறைக்கு குறித்த போதைப் பொருட்களை எடுத்துச் சென்ற நிலையில் பொலிசாரினால் இவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.போதைப் பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த நபர்கள் 26 மற்றும் 29 வயதுடைய நபர்கள் என தெரிவித்த பொலிசார் வாழைச்சேனையை சேர்ந்தவர்கள் எனவும்  மேலும் தெரிவித்தனர்.சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில்  மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement