• Feb 15 2026

கரையொதுங்கிய 2 டன் ராட்சத சுறா; ஆர்வமுடன் பார்த்து புகைப்படம் எடுக்கும் மக்கள்!

shanuja / Dec 11th 2025, 5:23 pm
image

தமிழகத்தின் கன்னியாகுமரி, கீழ் மிடாலம் கடற்கரை பகுதியில்  2 டன் எடை கொண்ட ராட்சத புள்ளி சுறா கரையொதுங்கியுள்ளது. 


குறித்த பகுதி மீனவர்கள் வீசிய கரைமடி வலையில் சிக்கி இறந்த நிலையில் குறித்த சுறா மீன் கரையொதுங்கியுள்ளது. 


குறித்த சுறா மீனை பார்வையிட்ட மீனவர்கள் அந்த மீனுடன் நின்று புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளனர். 


அத்துடன் சுறா மீனை அந்தப் பகுதி மக்களும்  பள்ளி மாணவ மாணவிகளும் ஆர்வமுடன் பார்த்து புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்துள்ளனர். 


2 டன் எடை கொண்ட சுறா மீனைப் பார்த்ததும் மாணவர்கள், குழந்தைகள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்துள்ளனர். 


சுறா மீனுடன் மாணவர்களும் பொதுமக்களும் ஓடிச் சென்று புகைப்படம் எடுக்கும் காணொளி வைரலாகி வருகின்றது.

கரையொதுங்கிய 2 டன் ராட்சத சுறா; ஆர்வமுடன் பார்த்து புகைப்படம் எடுக்கும் மக்கள் தமிழகத்தின் கன்னியாகுமரி, கீழ் மிடாலம் கடற்கரை பகுதியில்  2 டன் எடை கொண்ட ராட்சத புள்ளி சுறா கரையொதுங்கியுள்ளது. குறித்த பகுதி மீனவர்கள் வீசிய கரைமடி வலையில் சிக்கி இறந்த நிலையில் குறித்த சுறா மீன் கரையொதுங்கியுள்ளது. குறித்த சுறா மீனை பார்வையிட்ட மீனவர்கள் அந்த மீனுடன் நின்று புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் சுறா மீனை அந்தப் பகுதி மக்களும்  பள்ளி மாணவ மாணவிகளும் ஆர்வமுடன் பார்த்து புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்துள்ளனர். 2 டன் எடை கொண்ட சுறா மீனைப் பார்த்ததும் மாணவர்கள், குழந்தைகள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்துள்ளனர். சுறா மீனுடன் மாணவர்களும் பொதுமக்களும் ஓடிச் சென்று புகைப்படம் எடுக்கும் காணொளி வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement