• Mar 13 2025

முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கைது

Chithra / Mar 13th 2025, 12:31 pm
image

 

இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இராணுவ வீரர்கள் கண்டி, கட்டுகஸ்தோட்டை மற்றும் அலவத்துகொடை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இராணுவ வீரர்கள் கண்டி பிரதேசத்தில் பல்வேறு தொழில்களில் பணி புரிந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கைது  இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இராணுவ வீரர்கள் கண்டி, கட்டுகஸ்தோட்டை மற்றும் அலவத்துகொடை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இராணுவ வீரர்கள் கண்டி பிரதேசத்தில் பல்வேறு தொழில்களில் பணி புரிந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement