• Oct 19 2024

காலமாகி 20 ஆண்டுகள் கழிந்தும் அழுகாத துறவியின் நல்லுடல்!SamugamMedia

Sharmi / Mar 25th 2023, 10:52 am
image

Advertisement

தாய்லந்தின் மதிப்புமிகு துறவி லுவாங் ஃபூ வொராஃபொன் தவித்தான் காலமாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாகியும் அவரது  நல்லுடல் இதுவரை அழுகி போகவில்லையென கூறப்பட்டுள்ளது.

அத்துடன், அவரது உடலின் நிறம் பச்சை வண்ணத்துக்கு மாறியுள்ளதாக The Thaiger  செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

துறவி லுவாங்  தனது 101 ஆவது வயதில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்துள்ளார். அவரின் நல்லுடலை தகனம் செய்ய  முயன்ற போது அது தோல்வியில் முடிந்துள்ளது.

அதனால் ஏனைய துறவிகள் அவரது நல்லுடலை கண்ணாடிப் பேழையில் வைத்துள்ளனர். 2010 ஆம் ஆண்டளவில்  அது குளிர்பதனப் பேழைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதில் தேயிலைகள், ஈரப்பதத்தை உறிஞ்சும் மாத்திரைகள், கற்பூர மரப்பட்டை ஆகியவை மட்டுமே வைக்கப்பட்டதுடன் சிறப்பாக வேறு எந்தப் பொருளும் வைக்கப்படவில்லை என The Thaiger தெரிவித்துள்ளது.
.
ஒரு நாள் அங்குள்ள மடத் தலைவர் கனவில் காலமான துறவியின் நல்லுடல் இருக்கும் அறையைப் பாம்பு ஒன்று சுற்றும் காட்சி தோன்றியதை போன்று மற்றொரு துறவிக்கும் அதே கனவு தோன்ற இருவரும் நல்லுடலைக் காணச் சென்றனர்.

அங்குத் துறவி லுவாங்கின் தலையின் நடுப்பகுதி பச்சை நிறமாக மாறியதைக் கண்டு அவர்கள் வியந்துள்ளனர் பின்னர் 1 மாதம் கழித்து அவரின் முழு உடலும் பச்சை நிறமாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காலமாகி 20 ஆண்டுகள் கழிந்தும் அழுகாத துறவியின் நல்லுடல்SamugamMedia தாய்லந்தின் மதிப்புமிகு துறவி லுவாங் ஃபூ வொராஃபொன் தவித்தான் காலமாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாகியும் அவரது  நல்லுடல் இதுவரை அழுகி போகவில்லையென கூறப்பட்டுள்ளது. அத்துடன், அவரது உடலின் நிறம் பச்சை வண்ணத்துக்கு மாறியுள்ளதாக The Thaiger  செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. துறவி லுவாங்  தனது 101 ஆவது வயதில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்துள்ளார். அவரின் நல்லுடலை தகனம் செய்ய  முயன்ற போது அது தோல்வியில் முடிந்துள்ளது. அதனால் ஏனைய துறவிகள் அவரது நல்லுடலை கண்ணாடிப் பேழையில் வைத்துள்ளனர். 2010 ஆம் ஆண்டளவில்  அது குளிர்பதனப் பேழைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதில் தேயிலைகள், ஈரப்பதத்தை உறிஞ்சும் மாத்திரைகள், கற்பூர மரப்பட்டை ஆகியவை மட்டுமே வைக்கப்பட்டதுடன் சிறப்பாக வேறு எந்தப் பொருளும் வைக்கப்படவில்லை என The Thaiger தெரிவித்துள்ளது. .ஒரு நாள் அங்குள்ள மடத் தலைவர் கனவில் காலமான துறவியின் நல்லுடல் இருக்கும் அறையைப் பாம்பு ஒன்று சுற்றும் காட்சி தோன்றியதை போன்று மற்றொரு துறவிக்கும் அதே கனவு தோன்ற இருவரும் நல்லுடலைக் காணச் சென்றனர்.அங்குத் துறவி லுவாங்கின் தலையின் நடுப்பகுதி பச்சை நிறமாக மாறியதைக் கண்டு அவர்கள் வியந்துள்ளனர் பின்னர் 1 மாதம் கழித்து அவரின் முழு உடலும் பச்சை நிறமாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement