யாழ்ப்பாணத்தில் நாளாந்தம் சராசரியாக 200 பேர்
போக்குவரத்து விதிமீறலுக்காக பொலிஸாரால் பிடிக்கப்படுகின்றனர் என்று
யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம்
மாவட்டத்தில் விதிகளுக்கு முரணான போக்குவரத்து அண்மைக்காலமாக
அதிகரித்துள்ளது. பொலிஸார் இத்தகையவர்களை இறுக்கமாகக் கண்காணிக்கின்றனர்.
தினமும் சுமார் 200 பேர் விதிகளுக்கு முரணான சாரத்தியத்துக்காகப்
பொலிஸாரால் பிடிக்கப்படுகின்றனர்.
தலைக்கவசம் அணியாது வாகனம் செலுத்தல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும்
இதர பத்திரங்கள் இல்லாது வாகனம் செலுத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காகவே
அவர்கள் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்படுகின்றது.
தண்டப் பணத்துக்கான பற்றுச்சீட்டு வழங்கப்படுபவர்களில் 10 வீதமானவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றார்.