• May 07 2025

ஒரே நாளில் 200 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலி- தீவிரமடையும் ரஷ்ய தாக்குதல்!

Tamil nila / Dec 13th 2024, 10:22 pm
image

உக்ரைன் ஆயுதப் படைகள் குர்ஸ்க் பகுதியில் கடந்த நாளில் 200க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, “கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைன் ஆயுதப்படைகள் 200க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இழந்துள்ளன, பீரங்கி ஒன்று, 2 கவச வாகனங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. மொத்தத்தில், உக்ரைன் குர்ஸ்க் பகுதியில் தாக்குதலின் போது இதுவரை 40,060 க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளது” என வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள நோவோவனோவ்கா கிராமத்தின் கட்டுப்பாட்டை ரஷ்யப் படைகள் மீண்டும் பெற்றுள்ளதாக அந்நாட்டு ராணுவ அமைச்சகம் கூறி உள்ளது.

முன்னதாக அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், உலகில் நடக்கும் போர்களை தான் நிறுத்தப்போவதாக அறிவித்தார். இந்த சூழலில் பாரிசில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்களை சந்தித்த டிரம்ப் ரஷ்யாவிற்கு எதிரான போரை உடனே நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த ரஷ்ய வெளியுறவுத்துறை போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கு அதிபர் புடின் எப்போதும் தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தது

ஒரே நாளில் 200 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலி- தீவிரமடையும் ரஷ்ய தாக்குதல் உக்ரைன் ஆயுதப் படைகள் குர்ஸ்க் பகுதியில் கடந்த நாளில் 200க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, “கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைன் ஆயுதப்படைகள் 200க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இழந்துள்ளன, பீரங்கி ஒன்று, 2 கவச வாகனங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. மொத்தத்தில், உக்ரைன் குர்ஸ்க் பகுதியில் தாக்குதலின் போது இதுவரை 40,060 க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளது” என வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள நோவோவனோவ்கா கிராமத்தின் கட்டுப்பாட்டை ரஷ்யப் படைகள் மீண்டும் பெற்றுள்ளதாக அந்நாட்டு ராணுவ அமைச்சகம் கூறி உள்ளது.முன்னதாக அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், உலகில் நடக்கும் போர்களை தான் நிறுத்தப்போவதாக அறிவித்தார். இந்த சூழலில் பாரிசில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்களை சந்தித்த டிரம்ப் ரஷ்யாவிற்கு எதிரான போரை உடனே நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.இதற்கு பதிலளித்த ரஷ்ய வெளியுறவுத்துறை போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கு அதிபர் புடின் எப்போதும் தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தது

Advertisement

Advertisement

Advertisement

Buy Now