மாகாண சபைகளுக்கு சொந்தமான சுமார் 2000க்கும் அதிகமான வாகனங்கள் அண்மைய தினங்களில் காணாமல் போயுள்ளதாக பொது நிர்வாகம்இ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காணாமல் போயுள்ள வாகனங்களுள் வெவ்வேறான அதிசொகுசு கார் மற்றும் ஜீப் வண்டிகள் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.
மேலும் , மாகாண சபைகளில் வெவ்வேறு அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்கள் அவ்வப்போது காணாமல் போயுள்ள நிலையில் குறித்த வாகனங்கள் தொடர்பிலான தகவல்களை கண்டறிய தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, மாகாண சபைத் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிசொகுசு வாகனங்கள் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய மாகாண சபைக்குச் சொந்தமான சுமார் 31 வெவ்வேறு வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தணிக்கைக்கு வெளியிடப்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது.
தென் மாகாண சபைக்குச் சொந்தமான மோட்டார சைக்கிள் உள்ளிட்ட 201 வாகனங்களின் பௌதீக இருப்பு தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படவில்லை என தணிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மாகாண சபைகளுக்கு சொந்தமான 2000 வாகனங்களைக் காணவில்லை மாகாண சபைகளுக்கு சொந்தமான சுமார் 2000க்கும் அதிகமான வாகனங்கள் அண்மைய தினங்களில் காணாமல் போயுள்ளதாக பொது நிர்வாகம்இ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு காணாமல் போயுள்ள வாகனங்களுள் வெவ்வேறான அதிசொகுசு கார் மற்றும் ஜீப் வண்டிகள் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.மேலும் , மாகாண சபைகளில் வெவ்வேறு அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்கள் அவ்வப்போது காணாமல் போயுள்ள நிலையில் குறித்த வாகனங்கள் தொடர்பிலான தகவல்களை கண்டறிய தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.இதேவேளை, மாகாண சபைத் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிசொகுசு வாகனங்கள் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மத்திய மாகாண சபைக்குச் சொந்தமான சுமார் 31 வெவ்வேறு வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தணிக்கைக்கு வெளியிடப்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது.தென் மாகாண சபைக்குச் சொந்தமான மோட்டார சைக்கிள் உள்ளிட்ட 201 வாகனங்களின் பௌதீக இருப்பு தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படவில்லை என தணிக்கை சுட்டிக்காட்டுகிறது.