வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கை நெறியின் 06வது ஆராய்ச்சி மாநாடு நேற்று மற்றும் இன்றையதினம் வவுனியா பல்கலைக்கழக மட்டத்தில் இடம்பெற்றுவருகின்றது.
இதன் ஒரு கட்டமாக பல்கலைக்கழக வியாபார பீடத்தின் சகல கற்கைநெறிகள் தொடர்பாக தொழில் துறை நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களை இணைத்து அவர்களின் ஊடாக வவுனியா மாவட்டத்திலே உயர் தரம் கற்கும் மாணவர்களிற்கான தொழில் வழிகாட்டல் பயிற்சி பட்டறை இடம்பெற்றிருந்தது.
மேலும் தொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் அ.அற்புதராஜா, வியாபார கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் வை.நந்தகோபன் மற்றும் ஏனைய விரிவுரையாளர்கள், துறைசார் நிபுணர்கள், விரிவுரையாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கை நெறியின் ஆறாவது ஆராய்ச்சி மாநாடு வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கை நெறியின் 06வது ஆராய்ச்சி மாநாடு நேற்று மற்றும் இன்றையதினம் வவுனியா பல்கலைக்கழக மட்டத்தில் இடம்பெற்றுவருகின்றது.இதன் ஒரு கட்டமாக பல்கலைக்கழக வியாபார பீடத்தின் சகல கற்கைநெறிகள் தொடர்பாக தொழில் துறை நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களை இணைத்து அவர்களின் ஊடாக வவுனியா மாவட்டத்திலே உயர் தரம் கற்கும் மாணவர்களிற்கான தொழில் வழிகாட்டல் பயிற்சி பட்டறை இடம்பெற்றிருந்தது.மேலும் தொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது.இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் அ.அற்புதராஜா, வியாபார கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் வை.நந்தகோபன் மற்றும் ஏனைய விரிவுரையாளர்கள், துறைசார் நிபுணர்கள், விரிவுரையாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.