• Nov 21 2025

போதைப்பொருள் கடத்தல்: கைதான உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

Chithra / Nov 21st 2025, 12:49 pm
image

 

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவருக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் எக்ஸில் பதவிட்ட எதிர்க்கட்சித் தலைவர்,  

நேற்று போதைப்பொருள் தொடர்பான கைது செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் பொருத்தமான நடவடிக்கை எடுக்க தனி விசாரணை தொடங்கப்படும்.

போதைபபொருள் கடத்தல் தொடர்பில் பன்னாலையைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ள நிலையில் சஜித் பிரேமதாச இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்தக் கப்பலில் இருந்து சுமார் 4 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ அடங்கிய 376 கிலோ விற்கும் அதிகமான போதைப்பொருட்களை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

போதைப்பொருள் கடத்தல்: கைதான உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்  தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவருக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.இது தொடர்பில் எக்ஸில் பதவிட்ட எதிர்க்கட்சித் தலைவர்,  நேற்று போதைப்பொருள் தொடர்பான கைது செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக மேலும் பொருத்தமான நடவடிக்கை எடுக்க தனி விசாரணை தொடங்கப்படும்.போதைபபொருள் கடத்தல் தொடர்பில் பன்னாலையைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ள நிலையில் சஜித் பிரேமதாச இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.அந்தக் கப்பலில் இருந்து சுமார் 4 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ அடங்கிய 376 கிலோ விற்கும் அதிகமான போதைப்பொருட்களை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

Advertisement

Advertisement

Advertisement