• Nov 21 2025

பாம்பு கடிக்கு இலக்காகிய உயர்தர பரீட்சைக்கு சென்ற மாணவன்; பருத்தித்துறையில் சம்பவம்

Chithra / Nov 21st 2025, 12:41 pm
image


யாழ். பருத்தித்துறை காட்லிக் கல்லூரிக்கு உயர்தர பரீட்சை எழுத சென்ற மாணவன் ஒருவர் பாம்புக் கடிக்கு இலக்காகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது 

பரீட்சை எழுத துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன், துவிச்சக்கர வண்டியை நிறுத்தும் இடத்திற்கு சென்றபோது அவ் இடத்தில் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார். 

பாம்பு கடிக்கு இலக்காகிய மாணவனை உடனடியாக வடமராட்சி வலயக்கல்வி மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து  நோயாளி காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது. 

தற்போது குறித்த மாணவன் காட்லிக் கல்லூரியில் பரீட்சை  எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும் நோயாளி காவு வண்டி, வைத்தியர்கள் போன்றவர்களின் முழுமையான மருத்துவ கண்காணிப்புடனே குறித்த மாணவன் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாம்பு கடிக்கு இலக்காகிய உயர்தர பரீட்சைக்கு சென்ற மாணவன்; பருத்தித்துறையில் சம்பவம் யாழ். பருத்தித்துறை காட்லிக் கல்லூரிக்கு உயர்தர பரீட்சை எழுத சென்ற மாணவன் ஒருவர் பாம்புக் கடிக்கு இலக்காகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது பரீட்சை எழுத துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன், துவிச்சக்கர வண்டியை நிறுத்தும் இடத்திற்கு சென்றபோது அவ் இடத்தில் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார். பாம்பு கடிக்கு இலக்காகிய மாணவனை உடனடியாக வடமராட்சி வலயக்கல்வி மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து  நோயாளி காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது குறித்த மாணவன் காட்லிக் கல்லூரியில் பரீட்சை  எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆனாலும் நோயாளி காவு வண்டி, வைத்தியர்கள் போன்றவர்களின் முழுமையான மருத்துவ கண்காணிப்புடனே குறித்த மாணவன் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement