எதிர்வரும் 2028ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை நாடாளுமன்றிற்கு விடுத்து இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
2028ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்துடனான புதிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் வருமானம் ஈட்டும் போது செலுத்தப்பட வேண்டிய வரியில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்படி தற்போதுள்ள ஒரு இலட்சம் ரூபாய் என்ற, வருமானம் ஈட்டும் போது செலுத்த வேண்டிய வரிக்கான வருமான எல்லை, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான மாத வருமானத்தைப் பெறுகின்றவர்கள், வருமானம் ஈட்டும் போது செலுத்த வேண்டிய வரியை செலுத்த வேண்டியதில்லை.
அதேநேரம் குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுக்கு அதிக வரி சலுகைகளும், அதிக வருமானம் ஈட்டுகின்றவர்களுக்குக் குறைந்த வரி சலுகைகளும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்தார்.
அதேநேரம் அடுத்த ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகன இறக்குமதிக்கு மூன்று வழிமுறைகளில் அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதற்காக நாட்டின் பொருளாதாரத்துக்கு பொருத்தமான பொறிமுறை ஒன்று கடைபிடிக்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - வரி திருத்தம் தொடர்பிலும் சபையில் ஜனாதிபதியின் அறிவிப்பு எதிர்வரும் 2028ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.விசேட அறிக்கையொன்றை நாடாளுமன்றிற்கு விடுத்து இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.2028ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.மேலும் சர்வதேச நாணய நிதியத்துடனான புதிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் வருமானம் ஈட்டும் போது செலுத்தப்பட வேண்டிய வரியில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இதன்படி தற்போதுள்ள ஒரு இலட்சம் ரூபாய் என்ற, வருமானம் ஈட்டும் போது செலுத்த வேண்டிய வரிக்கான வருமான எல்லை, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான மாத வருமானத்தைப் பெறுகின்றவர்கள், வருமானம் ஈட்டும் போது செலுத்த வேண்டிய வரியை செலுத்த வேண்டியதில்லை.அதேநேரம் குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுக்கு அதிக வரி சலுகைகளும், அதிக வருமானம் ஈட்டுகின்றவர்களுக்குக் குறைந்த வரி சலுகைகளும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்தார்.அதேநேரம் அடுத்த ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகன இறக்குமதிக்கு மூன்று வழிமுறைகளில் அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.அதற்காக நாட்டின் பொருளாதாரத்துக்கு பொருத்தமான பொறிமுறை ஒன்று கடைபிடிக்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.