• Dec 31 2024

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் - இன்று 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை

Chithra / Dec 26th 2024, 7:20 am
image


இலங்கை வரலாற்றில் மாறா வடுவாக பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டு இன்று 20 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் நாடளாவிய ரீதியில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூரும் வகையில் இன்று புதன்கிழமை காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றன.

சுனாமி அனர்த்தத்தில் சேதமடைந்த 50 ஆம் இலக்க என்ஜினுடனான ரயில் ஒன்றும் வழமைபோல் பெரேலியவை சென்றடையவுள்ளதோடு ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குழுவொன்றும் அந்த ரயிலில் பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி சுமாத்ரா தீவுக்கு அருகில் 9.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக, இலங்கையின் 14 கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பட்டதுடன் சுமார் 35 ஆயிரம் பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் - இன்று 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை இலங்கை வரலாற்றில் மாறா வடுவாக பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டு இன்று 20 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் நாடளாவிய ரீதியில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூரும் வகையில் இன்று புதன்கிழமை காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சுனாமி அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றன.சுனாமி அனர்த்தத்தில் சேதமடைந்த 50 ஆம் இலக்க என்ஜினுடனான ரயில் ஒன்றும் வழமைபோல் பெரேலியவை சென்றடையவுள்ளதோடு ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குழுவொன்றும் அந்த ரயிலில் பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி சுமாத்ரா தீவுக்கு அருகில் 9.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக, இலங்கையின் 14 கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பட்டதுடன் சுமார் 35 ஆயிரம் பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement