• Dec 26 2024

கிளிநொச்சியில் கோர விபத்து- குழந்தை பலி: 3 பேர் படுகாயம்

Chithra / Dec 26th 2024, 7:28 am
image

 

கிளிநொச்சி நகர்ப்பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

A9 வீதியால் பயணித்த ரிப்பர் வாகனம் குறித்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்தினை ஏற்படுத்தியதுடன், விபத்து இடம் பெற்ற பகுதியிலிருந்து சுமார் 100m பாதையை விட்டு விலகி பயணித்துள்ளது.


விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளையும் ரிப்பர் வாகனம் குறிப்பிட்ட அளவு தூரம் இழுத்து சென்றுள்ளதுடன், தொழிற்பயிற்சி நிறுவனத்தின் விளம்பர பலகை மற்றும் தொலைத்தொடர்பு கம்பம் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தியுள்ளது.

குறித்த ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்ற மக்கள் குறிப்பிடுகின்றனர். சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.


சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 6 வயதுடைய குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றது.


சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


கிளிநொச்சியில் கோர விபத்து- குழந்தை பலி: 3 பேர் படுகாயம்  கிளிநொச்சி நகர்ப்பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.A9 வீதியால் பயணித்த ரிப்பர் வாகனம் குறித்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்தினை ஏற்படுத்தியதுடன், விபத்து இடம் பெற்ற பகுதியிலிருந்து சுமார் 100m பாதையை விட்டு விலகி பயணித்துள்ளது.விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளையும் ரிப்பர் வாகனம் குறிப்பிட்ட அளவு தூரம் இழுத்து சென்றுள்ளதுடன், தொழிற்பயிற்சி நிறுவனத்தின் விளம்பர பலகை மற்றும் தொலைத்தொடர்பு கம்பம் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தியுள்ளது.குறித்த ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்ற மக்கள் குறிப்பிடுகின்றனர். சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 6 வயதுடைய குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.விபத்தில் படுகாயமடைந்த குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றது.சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement