இலங்கையின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு, அதன் சட்ட அமைப்பில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கத் தவறியதை அடுத்து, உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம், இலங்கையை அதன் இணக்கமற்ற பட்டியலில் சேர்த்துள்ளது.
இந்த நடவடிக்கை தற்போது உலக ஊக்கமருந்து எதிர்ப்பு குறியீட்டில் இணங்காத நான்காவது நாடாக இலங்கையை அடையாளப்படுத்தியுள்ளது.
மொண்ட்ரீலை தளமாகக் கொண்ட இந்த உலக அமைப்பு முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பை "கவனிப்புப் பட்டியலில்" சேர்த்ததாகத் தெரிவித்திருந்தது.
இதன்படி, ரஷ்யா மற்றும் இலங்கையைத் தவிர சர்வதேச பொஸ்க் பெலோட்டா கூட்டமைப்பு மற்றும் சர்வதேச உடற்பயிற்சி மற்றும் உடற்கட்டமைப்பு கூட்டமைப்பு ஆகியன, உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் இணங்காத பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
சிக்கலைத் தீர்க்க தவறிய இலங்கை - உலக இணங்காத பட்டியலில் சேர்ப்பு இலங்கையின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு, அதன் சட்ட அமைப்பில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கத் தவறியதை அடுத்து, உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம், இலங்கையை அதன் இணக்கமற்ற பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த நடவடிக்கை தற்போது உலக ஊக்கமருந்து எதிர்ப்பு குறியீட்டில் இணங்காத நான்காவது நாடாக இலங்கையை அடையாளப்படுத்தியுள்ளது. மொண்ட்ரீலை தளமாகக் கொண்ட இந்த உலக அமைப்பு முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பை "கவனிப்புப் பட்டியலில்" சேர்த்ததாகத் தெரிவித்திருந்தது. இதன்படி, ரஷ்யா மற்றும் இலங்கையைத் தவிர சர்வதேச பொஸ்க் பெலோட்டா கூட்டமைப்பு மற்றும் சர்வதேச உடற்பயிற்சி மற்றும் உடற்கட்டமைப்பு கூட்டமைப்பு ஆகியன, உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் இணங்காத பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.