• Aug 20 2025

திடீரென மாறும் காலநிலை! 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Chithra / Aug 20th 2025, 8:01 am
image

நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் வெப்பத்தின் அளவு, மனித உடலால் உணரப்படும் அளவிற்கு எச்சரிக்கை மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, கிழக்கு, வடமத்திய மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை, வவுனியா, 

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் வெப்பமான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் அறிவிப்பின் படி, இன்று முதல் 10 மாவட்டங்களுக்கு வெப்பத்தின் அளவு குறித்து ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண், குறித்த மாவட்டங்களில் சில இடங்களில் ‘எச்சரிக்கை நிலை’ 

வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்தும் மிகுந்த அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

திடீரென மாறும் காலநிலை 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் வெப்பத்தின் அளவு, மனித உடலால் உணரப்படும் அளவிற்கு எச்சரிக்கை மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதற்கமைய, கிழக்கு, வடமத்திய மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் வெப்பமான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திணைக்களத்தின் அறிவிப்பின் படி, இன்று முதல் 10 மாவட்டங்களுக்கு வெப்பத்தின் அளவு குறித்து ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண், குறித்த மாவட்டங்களில் சில இடங்களில் ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.எனவே, அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அத்துடன், வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்தும் மிகுந்த அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement