தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 10,000 இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க அந்த நாட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எல்லை மோதலுக்குப் பிறகு கம்போடிய தொழிலாளர்கள் அவர்களது சொந்த நாட்டிற்கு திரும்புவதால், தாய்லாந்தில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், தாய்லாந்தில் வயதானவர்களின் தொகை அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சியடையும் தொழிலாளர் எண்ணிக்கை காரணமாக சுமார் 3 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை தாய்லாந்து நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் வேலை வாய்ப்புகளை வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த 30,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டிய தாய்லாந்து அதிகாரிகள், முதல் கட்டமாக அவர்களில் 10,000 தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களுக்கு வேலைவாய்பை வழங்க தாய்லாந்தில் அனுமதி தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 10,000 இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க அந்த நாட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எல்லை மோதலுக்குப் பிறகு கம்போடிய தொழிலாளர்கள் அவர்களது சொந்த நாட்டிற்கு திரும்புவதால், தாய்லாந்தில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தாய்லாந்தில் வயதானவர்களின் தொகை அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சியடையும் தொழிலாளர் எண்ணிக்கை காரணமாக சுமார் 3 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை தாய்லாந்து நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் வேலை வாய்ப்புகளை வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இலங்கையைச் சேர்ந்த 30,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டிய தாய்லாந்து அதிகாரிகள், முதல் கட்டமாக அவர்களில் 10,000 தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.