• Aug 20 2025

மனுஷ நாணயக்கார நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை

Chithra / Aug 20th 2025, 9:51 am
image

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார  இன்று (20) காலை நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். 

பணமோசடி சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (20) காலை குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையாகியுள்ளார்.

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பின் தலைவரால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டது.

அத்துடன் அவர் அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக சொத்து அல்லது சொத்துக்களை ஈட்டினாரா என்பது குறித்து விசாரணை நடத்தக் கோரினார்.

இந்த நிலையில் இன்று வாக்குமூலம் அளிப்பதற்காக குறித்த பிரிவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனுஷ நாணயக்கார நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார  இன்று (20) காலை நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். பணமோசடி சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (20) காலை குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையாகியுள்ளார்.இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பின் தலைவரால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டது.அத்துடன் அவர் அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக சொத்து அல்லது சொத்துக்களை ஈட்டினாரா என்பது குறித்து விசாரணை நடத்தக் கோரினார்.இந்த நிலையில் இன்று வாக்குமூலம் அளிப்பதற்காக குறித்த பிரிவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement