யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் இலங்கையின் தேயிலை நிலப்பரப்பு இணைக்கப்பட்டுள்ளது.
மத்திய கலாசார நிதியம் முன்வைத்த பரிந்துரைக்கு அமைய யுனெஸ்கோ இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்கனவே அநுராதபுரம், சிங்கராஜா மற்றும் மத்திய மலைநாட்டுப் பாரம்பரிய தளங்கள் உள்ளிட்ட 8 பாரம்பரிய தளங்கள் குறித்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், மலைநாட்டில் உள்ள தேயிலைத் தோட்டங்களை உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கும் முயற்சி சுற்றுலாத்துறைக்கு பெரும் நன்மை பயக்கும் என்று அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் கலாசார பாரம்பரியத்தை உலகிற்கு வெளிப்படுத்துவது இதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த பரிந்துரையானது நுவரெலியா, கண்டி, சப்ரகமுவ, ஊவா மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது எனவும், இது ஏனைய யுனெஸ்கோ தளங்களிலிருந்து வேறுபட்டது எனவும் பேராசிரியர் அதுல ஞானப தெரிவித்துள்ளார்.
உலக பாரம்பரிய தளங்கள் பட்டியல்; தேயிலை நிலப்பரப்புக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் இலங்கையின் தேயிலை நிலப்பரப்பு இணைக்கப்பட்டுள்ளது. மத்திய கலாசார நிதியம் முன்வைத்த பரிந்துரைக்கு அமைய யுனெஸ்கோ இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்கனவே அநுராதபுரம், சிங்கராஜா மற்றும் மத்திய மலைநாட்டுப் பாரம்பரிய தளங்கள் உள்ளிட்ட 8 பாரம்பரிய தளங்கள் குறித்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், மலைநாட்டில் உள்ள தேயிலைத் தோட்டங்களை உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கும் முயற்சி சுற்றுலாத்துறைக்கு பெரும் நன்மை பயக்கும் என்று அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையின் கலாசார பாரம்பரியத்தை உலகிற்கு வெளிப்படுத்துவது இதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த பரிந்துரையானது நுவரெலியா, கண்டி, சப்ரகமுவ, ஊவா மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது எனவும், இது ஏனைய யுனெஸ்கோ தளங்களிலிருந்து வேறுபட்டது எனவும் பேராசிரியர் அதுல ஞானப தெரிவித்துள்ளார்.