இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 21ஆவது மாதிரி கிராமம் நேற்று (04) பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் ஆகியோர் இணைந்து ‘சுஹத கம’ மாதிரி கிராமத்தைத் திறந்து வைத்ததுடன், அங்கு நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகளையும் பயனாளிகளிடம் கையளித்தனர்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற சபாநாயகர் (கலாநிதி) ஜகத் விக்கிரமரத்ன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இந்திய அரசாங்கத்தின் மானிய நிதியுதவியுடன், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சுடன் இணைந்து இந்த மாதிரி கிராம வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டது.
திட்டத்தின் கீழ், இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 600 குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மாவட்ட வீடமைப்புக் குழுக்களால் தெரிவு செய்யப்படும் குடும்பங்களுக்காக 24 வீடுகளைக் கொண்ட மாதிரி கிராமம் ஒன்று அமைக்கப்படுகிறது.
இதுவரை மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், கண்டி, கம்பஹா, அனுராதபுரம், பதுளை, மாத்தளை, புத்தளம், கொழும்பு, திருகோணமலை, மொனராகலை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, இரத்தினபுரி, அம்பாறை, குருநாகல், கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய 20 மாவட்டங்களில் மாதிரி கிராமங்கள் திறந்து வைக்கப்பட்டு, பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், திட்டத்தின் ஒட்டுமொத்த பணிகள் தற்போது சுமார் 98.5 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள நான்கு மாதிரி கிராமங்களும் விரைவில் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், பொலன்னறுவை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்திய நிதியுதவியில் பொலன்னறுவையில் 21ஆவது மாதிரி கிராமம் – 24 குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 21ஆவது மாதிரி கிராமம் நேற்று (04) பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் ஆகியோர் இணைந்து ‘சுஹத கம’ மாதிரி கிராமத்தைத் திறந்து வைத்ததுடன், அங்கு நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகளையும் பயனாளிகளிடம் கையளித்தனர்.இந்த நிகழ்வில் நாடாளுமன்ற சபாநாயகர் (கலாநிதி) ஜகத் விக்கிரமரத்ன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இந்திய அரசாங்கத்தின் மானிய நிதியுதவியுடன், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சுடன் இணைந்து இந்த மாதிரி கிராம வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டது.திட்டத்தின் கீழ், இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 600 குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மாவட்ட வீடமைப்புக் குழுக்களால் தெரிவு செய்யப்படும் குடும்பங்களுக்காக 24 வீடுகளைக் கொண்ட மாதிரி கிராமம் ஒன்று அமைக்கப்படுகிறது.இதுவரை மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், கண்டி, கம்பஹா, அனுராதபுரம், பதுளை, மாத்தளை, புத்தளம், கொழும்பு, திருகோணமலை, மொனராகலை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, இரத்தினபுரி, அம்பாறை, குருநாகல், கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய 20 மாவட்டங்களில் மாதிரி கிராமங்கள் திறந்து வைக்கப்பட்டு, பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், திட்டத்தின் ஒட்டுமொத்த பணிகள் தற்போது சுமார் 98.5 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள நான்கு மாதிரி கிராமங்களும் விரைவில் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.நிகழ்வில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், பொலன்னறுவை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.