மத்திய பெய்ரூட்டில் வியாழன் (10) மாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 117 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நகரின் மையப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் தாக்கியுள்ளது. காயமடைந்த பலர் ஆம்பியூலன்ஸ்களின் உதவியுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 2023 ஒக்டோபர் முதல் ஏராளமான சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 2,141 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 10,099 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் லெபனானின் சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, மத்திய காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கும் பாடசாலை மீது வியாழன் அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர்.
பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 பேர் மரணம் மத்திய பெய்ரூட்டில் வியாழன் (10) மாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 117 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.நகரின் மையப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் தாக்கியுள்ளது. காயமடைந்த பலர் ஆம்பியூலன்ஸ்களின் உதவியுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 2023 ஒக்டோபர் முதல் ஏராளமான சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 2,141 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 10,099 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் லெபனானின் சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, மத்திய காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கும் பாடசாலை மீது வியாழன் அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர்.