• Apr 03 2025

பேருந்தும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Chithra / May 29th 2024, 11:06 am
image


கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கு அருகில் தனியார் பேருந்தும், முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் எதிர்திசையில் இருந்து வந்த முச்சக்கரவண்டியுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதன்போது மண் திட்டுடன் மோதி பேருந்து சில அடிகள் கீழே சாலையில் கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் காயமடைந்த 20 பேர் கெஹாவத்தை ஆதார வைத்தியசாலையிலும் ஏழு பேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கு அருகில் தனியார் பேருந்தும், முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் எதிர்திசையில் இருந்து வந்த முச்சக்கரவண்டியுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது மண் திட்டுடன் மோதி பேருந்து சில அடிகள் கீழே சாலையில் கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த 20 பேர் கெஹாவத்தை ஆதார வைத்தியசாலையிலும் ஏழு பேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement