• Apr 15 2026

பொலிஸாரின் தீவிர சோதனையில் சிக்கிய 27,430 பேர் !

Ziya / Feb 7th 2026, 2:49 pm
image


பொலிஸார் நேற்று  முன்னெடுத்த நாளாந்த சோதனைகளின் போது 27,430 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்  என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


குறித்த சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகத்தின் பேரில் 524 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


அத்துடன், குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


மேலும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 309 பேரும் மற்றும் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 156 பேரும் இந்தச் சோதனைகளின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இச்சோதனை நடவடிக்கைகளின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 422 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அஜாக்கிரதையாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 79 சாரதிகளை பொலிஸார் பொறுப்பில் எடுத்துள்ளனர். 


அத்துடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,826 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

பொலிஸாரின் தீவிர சோதனையில் சிக்கிய 27,430 பேர் பொலிஸார் நேற்று  முன்னெடுத்த நாளாந்த சோதனைகளின் போது 27,430 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்  என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகத்தின் பேரில் 524 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 309 பேரும் மற்றும் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 156 பேரும் இந்தச் சோதனைகளின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சோதனை நடவடிக்கைகளின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 422 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அஜாக்கிரதையாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 79 சாரதிகளை பொலிஸார் பொறுப்பில் எடுத்துள்ளனர். அத்துடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,826 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement