சிறுபோக நெல் விவசாயத்திற்கான புதிய உற்பத்திச் செலவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற விசேட விவசாயிகள் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சு, விவசாய அபிவிருத்தி திணைக்களம், விவசாய திணைக்களம், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியன இணைந்து இந்த புதிய உற்பத்திச் செலவு அறிக்கையைத் தயாரித்துள்ளன.
அதன்படி, ஒரு கிலோகிராம் சிவப்பு நாடு நெல்லின் உற்பத்திச் செலவு 76 ரூபாயாகவும், வெள்ளை நாடு நெல்லின் உற்பத்திச் செலவு 87 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோகிராம் சம்பா நெல்லின் உற்பத்திச் செலவு 97 ரூபாயாகவும், கீரி சம்பா நெல்லின் உற்பத்திச் செலவு 119 ரூபாயாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
விவசாய அமைப்புகள் நீண்டகாலமாக முன்வைத்து வந்த கோரிக்கைக்கு அமைவாக, நெல் கிலோகிராம் ஒன்றின் உற்பத்திச் செலவுடன் 30 சதவீத இலாபத்தையும் இணைத்து, விவசாயிகளின் விளைச்சலுக்கு நியாயமான உத்தரவாத விலையை நிர்ணயிக்கும் கொள்கையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தினால் ஹெக்டேருக்கு 30,000 ரூபாய் உர மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த மானியத்தையும் உள்ளடக்கியே நெல் உற்பத்திச் செலவு கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், கோதுமை மா, அரிசி மற்றும் பாஸ்மதி போன்ற பல்வேறு உணவுப் பொருட்களை இன்றும் பெருமளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அமைச்சர் கே.டி. லால்காந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுபோக நெல் விவசாயத்திற்கான புதிய உற்பத்திச் செலவு அறிக்கை தயாரிப்பு - அமைச்சர் அறிவிப்பு சிறுபோக நெல் விவசாயத்திற்கான புதிய உற்பத்திச் செலவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.அநுராதபுரத்தில் நடைபெற்ற விசேட விவசாயிகள் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.விவசாய அமைச்சு, விவசாய அபிவிருத்தி திணைக்களம், விவசாய திணைக்களம், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியன இணைந்து இந்த புதிய உற்பத்திச் செலவு அறிக்கையைத் தயாரித்துள்ளன.அதன்படி, ஒரு கிலோகிராம் சிவப்பு நாடு நெல்லின் உற்பத்திச் செலவு 76 ரூபாயாகவும், வெள்ளை நாடு நெல்லின் உற்பத்திச் செலவு 87 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், ஒரு கிலோகிராம் சம்பா நெல்லின் உற்பத்திச் செலவு 97 ரூபாயாகவும், கீரி சம்பா நெல்லின் உற்பத்திச் செலவு 119 ரூபாயாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.விவசாய அமைப்புகள் நீண்டகாலமாக முன்வைத்து வந்த கோரிக்கைக்கு அமைவாக, நெல் கிலோகிராம் ஒன்றின் உற்பத்திச் செலவுடன் 30 சதவீத இலாபத்தையும் இணைத்து, விவசாயிகளின் விளைச்சலுக்கு நியாயமான உத்தரவாத விலையை நிர்ணயிக்கும் கொள்கையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், அரசாங்கத்தினால் ஹெக்டேருக்கு 30,000 ரூபாய் உர மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த மானியத்தையும் உள்ளடக்கியே நெல் உற்பத்திச் செலவு கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், கோதுமை மா, அரிசி மற்றும் பாஸ்மதி போன்ற பல்வேறு உணவுப் பொருட்களை இன்றும் பெருமளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அமைச்சர் கே.டி. லால்காந்த சுட்டிக்காட்டியுள்ளார்.