ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 29 வாகனங்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றில் பி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 29 வாகனங்கள் காணாமல் போனமை தொடர்பில்ஜனாதிபதியின் செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து இதனை தெரிவித்திருந்தது.
சம்பவம் தொடர்பில் மேலதிக செயலாளரிடம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த 29 வாகனங்களில் 16 வாகனங்களை கடைசியாக பயன்படுத்திய நபர்களின் விபரங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவற்றில் 13 வாகனங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை எனவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. .
இந்த வாகனங்கள் தொடர்பான கடிதப் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை 09 மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களிடம் கேட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இதன்படி, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்ட கோட்டை நீதவான் நிலுப்புலி லங்காபுர, விசாரணைகள் தொடர்பான முன்னேற்றங்களை அறிவிப்பதற்காக வழக்கை மார்ச் 12ஆம் திகதிக்கு அழைக்குமாறும் உத்தரவிட்டார்.
ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 29 வாகனங்கள் மாயம்; விசாரணைகள் ஆரம்பம். ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 29 வாகனங்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றில் பி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 29 வாகனங்கள் காணாமல் போனமை தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து இதனை தெரிவித்திருந்தது.சம்பவம் தொடர்பில் மேலதிக செயலாளரிடம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த 29 வாகனங்களில் 16 வாகனங்களை கடைசியாக பயன்படுத்திய நபர்களின் விபரங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவற்றில் 13 வாகனங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை எனவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. .இந்த வாகனங்கள் தொடர்பான கடிதப் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை 09 மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களிடம் கேட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.இதன்படி, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்ட கோட்டை நீதவான் நிலுப்புலி லங்காபுர, விசாரணைகள் தொடர்பான முன்னேற்றங்களை அறிவிப்பதற்காக வழக்கை மார்ச் 12ஆம் திகதிக்கு அழைக்குமாறும் உத்தரவிட்டார்.