இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
'டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்கள் ஊடாக எதிர்காலத்தை வடிவமைத்தல்' எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தலைமையில் அம்பாந்தோட்டை மாகம் ருகுணுபுர நிர்வாக வளாகத்தில் நடைபெற்றுள்ளது.
டிஜிட்டல் மயமாக்கல் மூலம் நிலையான மற்றும் நிதி ரீதியாக உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான மூலோபாயத் திட்டத்திற்கு அமைய இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்திய இலங்கை மத்திய வங்கி இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்கள் ஊடாக எதிர்காலத்தை வடிவமைத்தல்' எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தலைமையில் அம்பாந்தோட்டை மாகம் ருகுணுபுர நிர்வாக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் மூலம் நிலையான மற்றும் நிதி ரீதியாக உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான மூலோபாயத் திட்டத்திற்கு அமைய இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.