• Oct 18 2026

குறுஞ்செய்திகளுக்குப் பின்னால் மறைந்திருந்த வியாபாரம் – சாய்ந்தமருதில் பொலிஸாரின் வலையில் சிக்கிய நபர்!

Chithra / Oct 18th 2026, 11:24 am
image


சாய்ந்தமருது மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கைத்தொலைபேசி குறுஞ்செய்திகள் ஊடாக ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் 35 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சாய்ந்தமருது பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை (17) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சம்பவ தினத்தன்று மாவடிப்பள்ளிப் பகுதியிலிருந்து சாய்ந்தமருது நோக்கி பிரதான வீதியூடாக மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருள் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையிலேயே சந்தேகநபர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.


குறித்த நபர் நீண்டகாலமாகக் கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளைப் பரிமாறி, மிகவும் நுணுக்கமான முறையில் போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


சந்தேகநபரைச் சான்றுப் பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (18) சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறுஞ்செய்திகளுக்குப் பின்னால் மறைந்திருந்த வியாபாரம் – சாய்ந்தமருதில் பொலிஸாரின் வலையில் சிக்கிய நபர் சாய்ந்தமருது மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கைத்தொலைபேசி குறுஞ்செய்திகள் ஊடாக ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் 35 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சாய்ந்தமருது பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை (17) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவ தினத்தன்று மாவடிப்பள்ளிப் பகுதியிலிருந்து சாய்ந்தமருது நோக்கி பிரதான வீதியூடாக மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருள் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையிலேயே சந்தேகநபர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.குறித்த நபர் நீண்டகாலமாகக் கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளைப் பரிமாறி, மிகவும் நுணுக்கமான முறையில் போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேகநபரைச் சான்றுப் பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (18) சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement