நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (18) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
அத்துடன், புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
சிலாபம் முதல் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கிலோமீற்றருக்கும் அதிகரிக்கக்கூடும். இதனால், குறித்த கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
அதேவேளை, காலி முதல் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலைகள் 1.5 முதல் 2.0 மீற்றர் உயரம் வரை மேலெழக்கூடும்.
எனவே, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் உள்ளிட்ட கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வானிலை நிலைமைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதேவேளை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில், நில்வளா கங்கையின் இரு பகுதிகளில் சிறு வெள்ள நிலை பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (18) அதிகாலை 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட ஆறுகளின் நீர்மட்ட நிலவர அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நில்வளா கங்கையின் பனதுகம மற்றும் தல்கஹகொட நீரளவீட்டு நிலையங்களில் சிறு வெள்ள நிலை பதிவாகியுள்ளது.
பனதுகம பகுதியில் நில்வளா கங்கையின் நீர்மட்டம் 6.20 மீற்றராக உயர்ந்துள்ளதுடன், அங்கு நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சிறு வெள்ள எச்சரிக்கை மட்டம் 6.00 மீற்றராகக் காணப்படும் நிலையில், நீர்மட்டம் அதனைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தல்கஹகொட நீரளவீட்டு நிலையத்தில் நீர்மட்டம் 2.02 மீற்றராகப் பதிவாகியுள்ளதுடன், அங்கும் சிறு வெள்ள நிலை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, களனி கங்கையின் கெஹல்கமு ஓயா, களு கங்கையின் இரத்தினபுரி பகுதி மற்றும் குடா கங்கையின் மில்லகண்ட பகுதி ஆகிய இடங்களிலும் நீர்மட்டம் எச்சரிக்கை நிலையில் பதிவாகியுள்ளது.
எனினும், குறித்த பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மகாவலி கங்கை உள்ளிட்ட ஏனைய முக்கிய ஆறுகளின் பெரும்பாலான நீரளவீட்டு நிலையங்களில் நீர்மட்டம் வழமையான நிலையில் காணப்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆறுகளின் நீர்மட்ட மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், ஆறுகளை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று எந்தெந்த பகுதிகளில் கனமழை; தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (18) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.அத்துடன், புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.சிலாபம் முதல் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கிலோமீற்றருக்கும் அதிகரிக்கக்கூடும். இதனால், குறித்த கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.அதேவேளை, காலி முதல் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலைகள் 1.5 முதல் 2.0 மீற்றர் உயரம் வரை மேலெழக்கூடும்.எனவே, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் உள்ளிட்ட கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வானிலை நிலைமைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.இதேவேளைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில், நில்வளா கங்கையின் இரு பகுதிகளில் சிறு வெள்ள நிலை பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்று (18) அதிகாலை 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட ஆறுகளின் நீர்மட்ட நிலவர அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி, நில்வளா கங்கையின் பனதுகம மற்றும் தல்கஹகொட நீரளவீட்டு நிலையங்களில் சிறு வெள்ள நிலை பதிவாகியுள்ளது.பனதுகம பகுதியில் நில்வளா கங்கையின் நீர்மட்டம் 6.20 மீற்றராக உயர்ந்துள்ளதுடன், அங்கு நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் சிறு வெள்ள எச்சரிக்கை மட்டம் 6.00 மீற்றராகக் காணப்படும் நிலையில், நீர்மட்டம் அதனைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதேவேளை, தல்கஹகொட நீரளவீட்டு நிலையத்தில் நீர்மட்டம் 2.02 மீற்றராகப் பதிவாகியுள்ளதுடன், அங்கும் சிறு வெள்ள நிலை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, களனி கங்கையின் கெஹல்கமு ஓயா, களு கங்கையின் இரத்தினபுரி பகுதி மற்றும் குடா கங்கையின் மில்லகண்ட பகுதி ஆகிய இடங்களிலும் நீர்மட்டம் எச்சரிக்கை நிலையில் பதிவாகியுள்ளது.எனினும், குறித்த பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.மகாவலி கங்கை உள்ளிட்ட ஏனைய முக்கிய ஆறுகளின் பெரும்பாலான நீரளவீட்டு நிலையங்களில் நீர்மட்டம் வழமையான நிலையில் காணப்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், ஆறுகளின் நீர்மட்ட மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், ஆறுகளை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.