• Oct 18 2026

இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு எப்போது முடிவுக்கு வரும்? வெளியான புதிய அறிவிப்பு!

Chithra / Oct 18th 2026, 12:29 pm
image


நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று (18) இலங்கையை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தக் கப்பலின் வருகையைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களில் மேலும் 3,50,000 வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த மூன்று நாட்களில்  ஏற்கனவே 3,50,000 வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


தேவையற்ற முறையில் எரிவாயு சிலிண்டர்களை சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும்  நுகர்வோரிடம் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.


மேலும், இன்று (18) 85 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, சந்தையில் தற்போது நிலவும் லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் (20) முழுமையாகத் தீர்க்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


கடந்த இரண்டு நாட்களாக எரிவாயு விநியோக நடவடிக்கைகள் இடம்பெறாமையே சந்தையில் ஏற்பட்டுள்ள தற்காலிகத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


இதற்கிடையில், லாஃப்ஸ் எரிவாயு விநியோகத்தை சீரமைக்கும் வகையில் மேலும் இரண்டு எரிவாயுக் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


அதன்படி, 3,800 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று எதிர்வரும் 20ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் நளிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.


அத்துடன், 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறு தொடர்ச்சியாக எரிவாயுக் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ள நிலையில், சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் நாட்களில் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு எப்போது முடிவுக்கு வரும் வெளியான புதிய அறிவிப்பு நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று (18) இலங்கையை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் கப்பலின் வருகையைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களில் மேலும் 3,50,000 வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த மூன்று நாட்களில்  ஏற்கனவே 3,50,000 வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.தேவையற்ற முறையில் எரிவாயு சிலிண்டர்களை சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும்  நுகர்வோரிடம் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.மேலும், இன்று (18) 85 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சந்தையில் தற்போது நிலவும் லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் (20) முழுமையாகத் தீர்க்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.கடந்த இரண்டு நாட்களாக எரிவாயு விநியோக நடவடிக்கைகள் இடம்பெறாமையே சந்தையில் ஏற்பட்டுள்ள தற்காலிகத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.இதற்கிடையில், லாஃப்ஸ் எரிவாயு விநியோகத்தை சீரமைக்கும் வகையில் மேலும் இரண்டு எரிவாயுக் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி, 3,800 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று எதிர்வரும் 20ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் நளிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.அத்துடன், 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு தொடர்ச்சியாக எரிவாயுக் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ள நிலையில், சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் நாட்களில் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement