• Oct 18 2026

கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள்! 30,000 ஆசிரியர்கள் எப்போது நியமனம்? பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!

Chithra / Oct 18th 2026, 3:57 pm
image


நாட்டின் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், எதிர்வரும் ஆண்டில் 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்குப் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


நடப்பு ஆண்டில் முதலாம் தரத்திற்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டங்களையும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அனைத்துப் பிள்ளைகளினதும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தற்போதைய அரசாங்கம் புதிய கல்வி முறைமையொன்றைத் தயாரித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.


பரீட்சைகளுக்கு மாத்திரம் தயாராகும் மாணவர்களை உருவாக்குவதற்குப் பதிலாக, எதிர்காலம் குறித்த தெளிவான எதிர்பார்ப்புகளுடன் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய புதிய தலைமுறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதேவேளை, நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், 17,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் அறிவித்துள்ளார்.


அத்துடன், பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்கு 2,000 விரிவுரையாளர்களைப் புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் ஒட்டுமொத்தக் கல்விக் கட்டமைப்பிற்கும் சுமார் 30,000 புதிய ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு மேலதிகமாக, நாடளாவிய ரீதியில் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் 30,000 ஆசிரியர்கள் எப்போது நியமனம் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு நாட்டின் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், எதிர்வரும் ஆண்டில் 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்குப் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.நடப்பு ஆண்டில் முதலாம் தரத்திற்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டங்களையும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அனைத்துப் பிள்ளைகளினதும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தற்போதைய அரசாங்கம் புதிய கல்வி முறைமையொன்றைத் தயாரித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.பரீட்சைகளுக்கு மாத்திரம் தயாராகும் மாணவர்களை உருவாக்குவதற்குப் பதிலாக, எதிர்காலம் குறித்த தெளிவான எதிர்பார்ப்புகளுடன் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய புதிய தலைமுறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இதேவேளை, நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், 17,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் அறிவித்துள்ளார்.அத்துடன், பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்கு 2,000 விரிவுரையாளர்களைப் புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் ஒட்டுமொத்தக் கல்விக் கட்டமைப்பிற்கும் சுமார் 30,000 புதிய ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு மேலதிகமாக, நாடளாவிய ரீதியில் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement