• Sep 21 2026

போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்கவில் 3 தாய்லாந்து பெண்கள் கைது

Chithra / Sep 20th 2026, 10:49 am
image


தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள், பெருந்தொகையான 'குஷ்' (Kush) மற்றும் 'ஹசீஸ்' (Hashish) ஆகிய போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.


கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் பணியக (PDB) அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு அதிரடிச் சோதனைகளின் போதே இவர்கள் வலையில் வீழ்ந்துள்ளனர்.


முதல் சோதனையில் 38 வயதுடைய தாய்லாந்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 3 கிலோ 220 கிராம் குஷ் மற்றும் 1 கிலோ 852 கிராம் ஹசீஸ் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


இரண்டாவது சோதனையில் 31 வயதுடைய பெண் ஒருவரிடமிருந்து 1 கிலோ 994 கிராம் குஷ் மற்றும் 620 கிராம் ஹசீஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், இவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட குற்றத்திற்காக அதே விமானத்தில் பயணித்த 36 வயதுடைய மற்றொரு தாய்லாந்து பெண்ணும் கைது செய்யப்பட்டார்.


பறிமுதல் செய்யப்பட்ட மொத்த போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி மிக அதிகம் எனக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகள் தீவிர மேல் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்கவில் 3 தாய்லாந்து பெண்கள் கைது தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள், பெருந்தொகையான 'குஷ்' (Kush) மற்றும் 'ஹசீஸ்' (Hashish) ஆகிய போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் பணியக (PDB) அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு அதிரடிச் சோதனைகளின் போதே இவர்கள் வலையில் வீழ்ந்துள்ளனர்.முதல் சோதனையில் 38 வயதுடைய தாய்லாந்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 3 கிலோ 220 கிராம் குஷ் மற்றும் 1 கிலோ 852 கிராம் ஹசீஸ் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இரண்டாவது சோதனையில் 31 வயதுடைய பெண் ஒருவரிடமிருந்து 1 கிலோ 994 கிராம் குஷ் மற்றும் 620 கிராம் ஹசீஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், இவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட குற்றத்திற்காக அதே விமானத்தில் பயணித்த 36 வயதுடைய மற்றொரு தாய்லாந்து பெண்ணும் கைது செய்யப்பட்டார்.பறிமுதல் செய்யப்பட்ட மொத்த போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி மிக அதிகம் எனக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகள் தீவிர மேல் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement