• Sep 20 2026

உடப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமைகள்!

Chithra / Sep 20th 2026, 5:15 pm
image


புத்தளம் – உடப்பு, 6ஆம் வட்டாரப் பகுதியிலுள்ள கடற்கரையில் இன்று (20) மாலை இரண்டு கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.


உடப்பு பகுதியில் தற்போது வீசிவரும் கச்சான் காற்றின் தாக்கம் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.


அதேவேளை, அருகிவரும் கடலாமைகள் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளின் வலைகளில் சிக்கி உயிரிழந்த பின்னர், அவை மீண்டும் கடலில் வீசப்படுவதன் காரணமாக கரையொதுங்குவதாகவும் அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


கடலாமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில், இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


உடப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமைகள் புத்தளம் – உடப்பு, 6ஆம் வட்டாரப் பகுதியிலுள்ள கடற்கரையில் இன்று (20) மாலை இரண்டு கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.உடப்பு பகுதியில் தற்போது வீசிவரும் கச்சான் காற்றின் தாக்கம் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை, அருகிவரும் கடலாமைகள் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளின் வலைகளில் சிக்கி உயிரிழந்த பின்னர், அவை மீண்டும் கடலில் வீசப்படுவதன் காரணமாக கரையொதுங்குவதாகவும் அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.கடலாமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில், இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement