• Jul 04 2024

இலங்கையில் நாளொன்றுக்கு காயங்களால் 32 பேர் மரணம்..! வெளியான அதிர்ச்சித் தகவல்

Chithra / Jul 2nd 2024, 8:20 am
image

Advertisement

 

இலங்கையின் சுகாதார அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, ஒவ்வொரு நாளும் குறைந்தது 32 பேர் ஏதோ ஒரு காரணத்தினால் காயங்களுக்கு உள்ளாகின்றனர்

இதன் காரணமாக, வருடாந்தம் சுமார் 12,000 பேர் உயிரிழக்கின்றனர்.

இலங்கையில் ஜூலை 01 முதல் 07 வரையில், தேசிய காயம் தடுப்பு வாரம் நினைவுக்கூரப்படுகின்ற நிலையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தகவல்களின்படி காயங்கள் காரணமாக வருடாந்தம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இது சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினரை பாதிக்கும் விடயமாகும்.

காயங்கள் உயிரிழப்புகளை விளைவிப்பது மட்டுமல்லாமல், குடும்பங்கள் மற்றும் சுகாதார அமைப்பு மீது கணிசமான பொருளாதார சுமையையும் சுமத்துவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இலங்கையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் 10வது முக்கிய காரணங்களில் காயங்களும் உள்ளடங்கியுள்ளன

கடுமையான காயங்கள் அல்லது அவற்றின் சிக்கல்கள் வைத்தியலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடையே இறப்பு விகித அதிகரிப்புக்கு கணிசமான பங்கை வகிக்கின்றன என்றும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் நாளொன்றுக்கு காயங்களால் 32 பேர் மரணம். வெளியான அதிர்ச்சித் தகவல்  இலங்கையின் சுகாதார அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, ஒவ்வொரு நாளும் குறைந்தது 32 பேர் ஏதோ ஒரு காரணத்தினால் காயங்களுக்கு உள்ளாகின்றனர்இதன் காரணமாக, வருடாந்தம் சுமார் 12,000 பேர் உயிரிழக்கின்றனர்.இலங்கையில் ஜூலை 01 முதல் 07 வரையில், தேசிய காயம் தடுப்பு வாரம் நினைவுக்கூரப்படுகின்ற நிலையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.தகவல்களின்படி காயங்கள் காரணமாக வருடாந்தம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.இது சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினரை பாதிக்கும் விடயமாகும்.காயங்கள் உயிரிழப்புகளை விளைவிப்பது மட்டுமல்லாமல், குடும்பங்கள் மற்றும் சுகாதார அமைப்பு மீது கணிசமான பொருளாதார சுமையையும் சுமத்துவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், இலங்கையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் 10வது முக்கிய காரணங்களில் காயங்களும் உள்ளடங்கியுள்ளனகடுமையான காயங்கள் அல்லது அவற்றின் சிக்கல்கள் வைத்தியலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடையே இறப்பு விகித அதிகரிப்புக்கு கணிசமான பங்கை வகிக்கின்றன என்றும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement