• Dec 09 2024

கிண்ணியாவில் குளவி கொட்டுக்கு இலக்கான 32 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Chithra / Jul 30th 2024, 2:14 pm
image

 

கிண்ணியா அல் அக்சா கல்லூரியில் இன்று  காலை 32 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் குளவி கொட்டுக்கு இலக்காகி கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பாடசாலையில் தொழில்நுட்ப பிரிவு கட்டடத்தில் தொங்கிக் கொண்டிருந்த குளவி கூடு ஒன்று, பலத்த காற்றின் காரணமாக கீழே விழுந்ததனால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரியவருகின்றது.

கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்தியசாலைக்கு நேரில் சென்று, காயமடைந்த மாணவர்களை பார்வையிட்டனர் .

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிண்ணியா பொலிஸரர் தெரிவித்தனர்.  


 

கிண்ணியாவில் குளவி கொட்டுக்கு இலக்கான 32 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி  கிண்ணியா அல் அக்சா கல்லூரியில் இன்று  காலை 32 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் குளவி கொட்டுக்கு இலக்காகி கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தப் பாடசாலையில் தொழில்நுட்ப பிரிவு கட்டடத்தில் தொங்கிக் கொண்டிருந்த குளவி கூடு ஒன்று, பலத்த காற்றின் காரணமாக கீழே விழுந்ததனால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரியவருகின்றது.கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்தியசாலைக்கு நேரில் சென்று, காயமடைந்த மாணவர்களை பார்வையிட்டனர் .சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிண்ணியா பொலிஸரர் தெரிவித்தனர்.   

Advertisement

Advertisement

Advertisement