1986ம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 38வது நினைவேந்தல் இன்று மாலை 6 மணியளவில் வவுனியாவில் உள்ள சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான சங்கர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்ததுடன் முதலாவது ஈகைச்சுடரினையும் ஏற்றிவைத்திருந்தார் அவரை தொடர்ந்து சிறீசபாரத்தினத்தின் மெய்ப்பாதுகாவலரும் ரெலோ அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவருமான அஜித்தும் கலந்து கொண்டு மலர் மாலை அணி வித்து அஞ்சலியை செலுத்தி இருந்தார்.
தொடர்ந்து தமிழ் விருட்சம் அமைப்பின் ஸ்தாபகர் கண்ணா, கலைஞர் மாணிக்கம் ஜெகன், சிறீதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞரணியினர் பிரதேச அமைப்பாளர்கள், என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியை செலுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரின் 38வது நினைவேந்தல் நிகழ்வு. 1986ம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 38வது நினைவேந்தல் இன்று மாலை 6 மணியளவில் வவுனியாவில் உள்ள சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான சங்கர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்ததுடன் முதலாவது ஈகைச்சுடரினையும் ஏற்றிவைத்திருந்தார் அவரை தொடர்ந்து சிறீசபாரத்தினத்தின் மெய்ப்பாதுகாவலரும் ரெலோ அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவருமான அஜித்தும் கலந்து கொண்டு மலர் மாலை அணி வித்து அஞ்சலியை செலுத்தி இருந்தார்.தொடர்ந்து தமிழ் விருட்சம் அமைப்பின் ஸ்தாபகர் கண்ணா, கலைஞர் மாணிக்கம் ஜெகன், சிறீதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞரணியினர் பிரதேச அமைப்பாளர்கள், என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியை செலுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.