நாட்டில் சுமார் 6 இலட்சம் மக்களுக்கு இன்னமும் பாதுகாப்பான அல்லது பகுதியளவான நிரந்தர வீடுகள் இல்லாத நிலை காணப்படுவதாக வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2024 டிசம்பர் மாதத் தரவுகளின்படி, நாட்டில் சுமார் 61 இலட்சம் குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில், சுமார் 60 இலட்சம் வீடமைப்பு அலகுகளே காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில குடும்பங்களுக்கு தலா இரண்டு வீடுகள் காணப்பட்டாலும், அவற்றில் சில வீடுகள் வசிப்பதற்கு உகந்த நிலையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வாக அரசாங்கம் 31,000 வீடுகளை உள்ளடக்கிய விசேட வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் முதற்கட்டத்தின் கீழ் 19,000 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படவோ அல்லது தற்போதுள்ள வீடுகள் புனரமைக்கப்படவோ உள்ளன. இதில் சுமார் 12,000 வீடுகள் அரசாங்கத்தின் முழுமையான உதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், ஏனைய வீடுகளுக்கு கடன் நிவாரண உதவி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது சுமார் 20,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அவற்றில் சில நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் எனவும், அவற்றின் பணிகளை அரசாங்கம் நிறைவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சில வீடுகளின் நிர்மாணப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் எனவும், இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக, அரச அதிகாரிகள் மற்றும் அரச ஊழியர்கள் வீடமைப்புக் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கான நிவாரணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதேபோல், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு நிவாரண வீடமைப்புக் கடன்களை வழங்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் திட்டங்கள் 31,000 வீடுகள் என்ற இலக்கில் உள்ளடக்கப்படவில்லை எனவும், அவற்றுக்கு மேலதிகமாகவும் பெருமளவிலான வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி 5,000க்கும் மேற்பட்ட வீடுகளை திறந்து வைக்க எதிர்பார்ப்பதாகவும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
6 இலட்சம் மக்களுக்கு பாதுகாப்பான வீடுகள் இல்லை; அரசாங்கம் எடுத்துள்ள புதிய நடவடிக்கை நாட்டில் சுமார் 6 இலட்சம் மக்களுக்கு இன்னமும் பாதுகாப்பான அல்லது பகுதியளவான நிரந்தர வீடுகள் இல்லாத நிலை காணப்படுவதாக வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2024 டிசம்பர் மாதத் தரவுகளின்படி, நாட்டில் சுமார் 61 இலட்சம் குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில், சுமார் 60 இலட்சம் வீடமைப்பு அலகுகளே காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.சில குடும்பங்களுக்கு தலா இரண்டு வீடுகள் காணப்பட்டாலும், அவற்றில் சில வீடுகள் வசிப்பதற்கு உகந்த நிலையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வாக அரசாங்கம் 31,000 வீடுகளை உள்ளடக்கிய விசேட வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இதன் முதற்கட்டத்தின் கீழ் 19,000 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படவோ அல்லது தற்போதுள்ள வீடுகள் புனரமைக்கப்படவோ உள்ளன. இதில் சுமார் 12,000 வீடுகள் அரசாங்கத்தின் முழுமையான உதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், ஏனைய வீடுகளுக்கு கடன் நிவாரண உதவி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, தற்போது சுமார் 20,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அவற்றில் சில நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் எனவும், அவற்றின் பணிகளை அரசாங்கம் நிறைவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், சில வீடுகளின் நிர்மாணப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் எனவும், இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதற்கு மேலதிகமாக, அரச அதிகாரிகள் மற்றும் அரச ஊழியர்கள் வீடமைப்புக் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கான நிவாரணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.அதேபோல், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு நிவாரண வீடமைப்புக் கடன்களை வழங்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்தத் திட்டங்கள் 31,000 வீடுகள் என்ற இலக்கில் உள்ளடக்கப்படவில்லை எனவும், அவற்றுக்கு மேலதிகமாகவும் பெருமளவிலான வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி 5,000க்கும் மேற்பட்ட வீடுகளை திறந்து வைக்க எதிர்பார்ப்பதாகவும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.